வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முர்ளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 24.08.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு விசேஷ யாகத்துடன் ஆராதனைகள் நடைபெற உள்ளது.
ஸ்ரீ ஆஞ்சநேயர் சிறந்த ராம பக்தர். இவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுபவர். இவர் வலிமை, பக்தி மற்றும் பணிவை குறிப்பவர். தூய மனதுடன் அவரிடம் சரணடையும் அனைவருக்கும் அவர் தைரியம், மன அமைதி,பாதுகாப்பு மற்றும் வெற்றியை அளிப்பார். இவரை வழிபட்டால் வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் தைரியத்தை அடையலாம், தனிப்பட்ட மற்றும் சமூக குறிக்கோள்களை அடைய மன உறுதியை மேம்படுத்திக் கொள்ளலாம், பணியில் ஸ்திரத்தன்மை காணலாம், குறிகோள்களை அடைவதற்கான திறனை வளர்த்து கொள்ளலாம், வெற்றி மற்றும் மகிழ்ச்சி காணலாம், தொழில், அரசியல் போன்றவற்றில் செல்வாக்கு பெறலாம். மேலும் சனி கிரத்தினால் ஏற்படும் தொல்லைகள் அகலும், ஞானத்தை பெறலாம், தீர்க்க ஆயுள் கிடைக்கும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயரை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.