ANNAPRASHAN FOR BABY

தன்வந்திரி பீடத்தில் ஆனி 23 (07.07.2021) புதன்கிழமை         அன்னபிரசன்ன வைபவம்

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழபுதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற ஆனி 23, 07.07.2021 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தன்வந்திரி பகவான் சந்நதியில் அன்னப்பிரசன்ன (சாதம் ஊட்டுதல்) வைபவம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெறுகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் புனிதமானது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்கள் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க கட்டத்திலும் வேதங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சில அனுசரிப்புகளை பாரம்பரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். சாஸ்திரங்களின்படி, மொத்தம் 16 இந்து சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. அவற்றில் அன்னபிரசன்னம் நிகழ்ச்சியும் ஒன்று. இறைவனின் ஆசிகளோடு குழந்தை பிறந்து முதலாவது திட உணவை ஊட்டும் சடங்கு தான் 'அன்னபிரசன்னம்'. தமிழ் மொழியில் இதை சோறு ஊட்டும் சடங்கு என கூறுவர். குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் திட உணவு ஊட்டும் நிகழ்வை நடத்துவார்கள்.

தன்வந்திரி பீடத்தில் குழந்தை பிறந்த 8, 9  மாதங்களிலும் ஆடி, மார்கழி மாதங்களை தவிர்த்து பிற மாதங்களிலும் அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும் த்விதியை, திருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களிலும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி அன்னப்பிரசன்ன வைபவம் சிறந்த வேத பண்டிதர்களைக் கொண்டு தேவைபடுபவர்களுக்கு நடத்தி தருகிறார்க்ள்.

குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு முதலாவது திட உணவை தெய்வங்களின் ஆசிகளோடு குழந்தைகளுக்கு ஊட்டும் இந்த அன்னப்பிரசன்னம் மற்ற சுப சடங்குகளை போலவே சுபமுகூர்த்த நாளில் இங்கு நடைபெற்று வருகிறது. அந்த நாளில், உற்றார் உறவினர் சூழ, குழந்தைக்கு அரிசி கொண்டு தயார் செய்யப்பட்ட பாயாசம் ஊட்டப்படுகிறது. அந்த சமயத்தில் குழந்தை நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செழிப்பு ஆகியவற்றை பெற வேண்டும் என்று உற்றார் உறவினரால் ஆசீர்வதிக்கப்படுகிறது.

அன்னபிரசன்ன திதி குழந்தை பிறந்த 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எப்போது வேண்டுமானாலும் வரும். பஞ்சாங்கத்தின்படி, புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு இந்த விழா ஒற்றைப்படை மாதங்களிலும், ஆண் குழந்தைக்கு இரட்டைப்படை மாதங்களிலும் செய்யப்பட வேண்டும். இதன் பொருள், புதிதாகப் பிறந்த பெண் என்றால், அவளுடைய அன்னபிரசன்ன விழா குழந்தை பிறந்த 7, 9, அல்லது 11 வது மாதங்களில் கொண்டாடப்பட வேண்டும். பையனைப் பொறுத்தவரை, அது 6, 8, 10 மாதங்களில் இருக்க வேண்டும்.

MORE DETAILS PLEASE CONTACT 94433 30203

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images