Ashvamedha poojai with Asvaurta Homam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று ரதசப்தமியை முன்னிட்டு அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் வேண்டியும், அரசர் வாழ்வு வேண்டியும் அஸ்வாரூட ஹோமத்துடன் அஸ்வமேத பூஜை நடைபெற்றது.

காலை மங்கள இசையுடன் கோ பூஜை, வேத பாராயணங்களுடன் யாகசாலை பூஜை, மஹா கணபதி பூஜை, மஹாசங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், ருத்ர ஹோமம், ஆஸ்வாரூட ஹோமத்துடன் ஐந்து குதிரைகளுக்கு (அஸ்வங்களுக்கு) விசேஷ அலங்கார ஆராதனைகள் அஸ்வமேத பூஜையாக நடைபெற்றது.

ராஜபோக வாழ்வு வேண்டியும், ராஜகுமாரன் அமைய வேண்டியும், இந்திர பதவியுடன் இந்திரன் போல் வாழ வேண்டியும், வசீகர சக்தி பெறவும், மக்கள் வசியம் பெறவும், வெற்றிமேல் வெற்றி பெறவும், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் பெறவும், எதிரிகளை வெல்லவும், தொழில் வியாபாரத்தில் ஏற்படும் மந்த நிலை மற்றும் தடைகள் விலகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், அனைத்தும் குதிரை வேகத்தில் நன்மைகள் கிடைத்து ராஜ போக வாழ்க்கையுடன் போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறவும், எதிர்பாராத வகையில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகவும், ஆண் சந்ததி ஏற்படவும், வம்ச விருத்தி கிடைக்கவும், சினிமா, அரசியல் மற்றும் பெரும் வியாபாரம் பெருகவும், எதிரிகளையும், சத்ருக்களையும் எதிர்கொள்ளும் வல்லமை பெறவும், சொப்ன தேவியின் அருள் கிடைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் பெற்று செல்வாக்குடன் வாழவும், மிக பெரிய கோடீஸ்வரர்களாக வேண்டியும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடவும், நல்ல மண வாழ்க்கை அமையவும் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட சிவாசாரியர்கள் பங்கேற்று வேத பாராயணங்கள் செய்தனர்.

இந்த யாகத்தில் கனடா நாட்டில் வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரியரும் நிர்வாகியுமான திரு. லோகேந்திர லிங்கம், திருமதி. லோகேந்திர லிங்கம், மலேசியா தொழிலதிபர் சரவணன், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் விஜயகுமார், சுரேஷ், சென்னை குணசேகரன் குடும்பத்தினர், ராம்குமார் குடும்பத்தினர், ராமச்சந்திரன் குடும்பத்தினர், பிரகாஷ், ஹரிஹரன், இன்பவல்லி விஜயவாடா சுரேஷ் குடும்பத்தினர், சென்னை தினகரன் குடும்பத்தினர், ஆரணி கண்ணன் குடும்பத்தினர், பெங்களூர் சங்கமேஸ்வரன் குடும்பத்தினர், பாணிச்சேரி தண்டபாணி, சீனுவாசன் குடும்பத்தினர், கரூர் முத்துராஜா, திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கர், தாமிரா டீவி நாகமணி மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 
 

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images