திருஷ்டி துர்கா சூலினி துர்கா ஹோமம் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் தேய் பிறை அஷ்டமி யை முன்னிட்டு நடைபெற உள்ளது
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 13.07.2020 திங்கள் கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடை பெற உள்ளது.
திருஷ்டி தோஷத்தினால் ஏற்படும் வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் – மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகள் நிவர்த்தியாக மேலும் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாகவும், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், சூலினி துர்கா ஹோமமும் அஷ்ட பைரவர் யாகமும் நடை பெற உள்ளது
இந்த யாகத்தில் Covid -19 எனும் கொடிய அரக்கன் ஒழியவும் இயற்கை சீற்றங்கள் குறையவும், மழை வேண்டியும், சகல வளங்களையும் பெறவும், தொழில், உத்யோக அபிவிருத்தி, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நன்மைகளுக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த யாகங்களில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளிப்பூ, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், முறம், வெள்ளை பூசணிக்காய் போன்ற பல்வேறு விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது.பொது மக்கள் யாரும் இந்த யாக பூஜைகளில் பங்கேற்க அனுமதி இல்லை.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.