Astalakshmi Yagam Arokiya Laskhmi Homam

ஆதிலட்சுமி

ஆதிஅந்தம் என்பார்கள். ஆதி என்றால் முதல்என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்தபோதுவெளிவந்த முதல் லட்சுமிதான் ஆதிலட்சுமிஎன்றழைக்கப்படுவது. இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று நம்புகிறார்கள்.

தான்யலட்சுமி

ஆறுதிருக்கரங்களுடன், கரங்களில் தானிய நெற்கதிர் மற்றும்கரும்பு உடையவளாய் கஜபீடத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள்இவள்உலகில் பசிப்பிணி தீர்ப்பவள். தானியங்களின் விளைச்சல் தருபவள். வயிறு சம்பந்தமான பிணி தீர்ப்பவள். இவளை வழிபட்டால் பசிப்பிணி போகும்.

தைரியலட்சுமி

மனத்திற்கு தைரியத்தைக் கொடுத்து தன்னம்பிக்கையூட்டுபவள். இந்த தைரியலட்சுமிக்கு வீரியம் அதிகம். செய்யும் காரியங்களில் வெற்றியும், மனோதைரியமும் வேண்டுபவர்கள் வழிபட வேண்டிய தேவி இவள்

சந்தானலட்சுமி

சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள்சந்ததி வளர குழந்தைச் செல்வம் தந்து வரமளிப்பதால் சந்தானலட்சுமி என்று பெயர் பெற்றாள்.  சடையுடன்கிரீடத்தைத் தரிசித்தபடி வரத அபயத் திருக்கரங்களுடன்கத்தி, கேடயம்  ஆகியஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள்.இவளது பீடத்தில் இரு கன்னிப் பெண்கள்சாமரம் வீசியபடியும், விளக்கைக் கையிலேந்தியும்  நின்றுகொண்டிருக்கின்றனர்இவளைவழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும்.

விஜயலட்சுமி

அன்னப்பறவையின் மீது வீற்றிருப்பவள் விஜயலட்சுமி. விஜயம் என்றாலே ஜெயம். வெற்றி என்று பொருள். தன்னை வணங்கி காரியம் தொடங்குபவர்களுக்கு வெற்றி, ஜெயம் அருள்பவள்இவளே.

வித்யாலட்சுமி

கலைவாணியும்லட்சுமியும் இணைந்து நிற்பவள்தான் இந்தவித்யாலட்சுமி. இவள். வித்யை என்பதற்கு ஞானத்தின் மூலம் கற்கும் வித்தைகள் என்று பொருள். இந்தத்திருமகளை வழிபட்டால் கல்வியும் வளரும், செல்வமும் வளரும்.

கஜலட்சுமி

இரண்டுயானைகள் இருபுறமும் துதிக்கையில் கலசம் ஏந்திப் போற்ற,தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள்.கஜம் என்றால் யானை என்றுபொருள். இருபுறமும்  யானைகள்கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வதுபோல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்ற பெயர் அமைந்தது.கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி என்றும்அழைப்பதுண்டு. கஜலட்சுமியின் உருவத்தை வீடுகளின் வாசல் நிலைப்படியில் பெரும்பாலும்காணலாம். வாழ்க்கையில் சௌபாக்கியங்களும் பெற விரும்புபவர்கள் கஜலட்சுமியை வணங்குங்கள்.

தனலட்சுமி

செல்வங்களை அள்ளியள்ளித் தரும் தனலட்சுமி இடது கரத்தில் கெண்டிவைத்துக் கொண்டும், வலது கரத்தில் தாம்பூலவெற்றிலை கொண்டும் காட்சி தருபவள். தன்னைநம்பி வருபவர்களுக்கு தனத்தை அளிக்கும் பாவனையேஇந்த பாவனை.

ஆரோக்ய லஷ்மி

அஷ்ட லஷ்மிகளின் அனுக்கிரகம் பெற்றிருந்தாலும் அதனை அனுபவிக்க ஆரோக்ய லஷ்மியின் அருள் வேண்டி உள்ளதால் இவளை வணங்கி ஆரோக்யம் பெற்று ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட லஷ்மிகளின் அருள் பெற தன்வந்திரி பீடத்தில் விஜய தசமியன்று நடைபெறும் அஷ்டலஷ்மி யாகத்தில் கலந்து கொண்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஆரோக்ய லஷ்மியையும் கஜலஷ்மியையும் குபேர லஷ்மியையும் வழிபட்டு வாழ்வில் வளம் பெறப்ரார்த்திக்கின்றோம்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images