1.சூலினி சத்ரு சம்ஹார ப்ரத்தியங்கிரா யாகம்
2.பித்ரு தோஷ நிவர்த்தி யாகம்
3.பணம் தரும் பைரவர் யாகத்துடன், கால பைரவர் யாகம்
4.சந்தான கோபால யாகம்,
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மே மாதம் 18.05.2017, 23.05.2017, 25.05.2017, 29.05.2017 மற்றும் 31.05.2017 ஆகிய ஐந்து நாட்கள் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள் உலக நலன் கருதியும், கோடை வெய்யிலின் தாக்கம் குறையவும், மழைவேண்டியும், வாழ்வில் வளம் பெறவும், ஆண் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை வேண்டியும், மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், ஆயுள்பலம் கூடவும், வியாபாரம் தொழில் சிறக்கவும், சத்ருக்கள் மற்றும் எதிரிகள் தொல்லை அகலவும், பயம் விலகவும், இயற்கை வளங்கள் பெறுகவும், தம்பதி ஒற்றுமைகள் கூடவும், பில்லி சூன்யம் செய்வினை போன்றவைகளால் ஏற்படும் மாயை அகலவும், வாக்கு பலிதம் ஏற்படவும், கலைகளில் சிறந்து விளங்கவும், பட்சி தோஷம், நாக தோஷங்கள், பித்ரு தோஷங்கள் பிரேத தோஷம், பூமி தோஷம் போன்ற தோஷங்கள் விலகவும், கோ சாபம், ஸ்ரீ சாபம்,சுமங்கலி சாபம்,மூதாதையர் சாபம்,போன்ற சாபங்கள் அகலவும்,. மனநோய் நீங்கவும், மரண பயம் அகலவும் குலதெய்வ அருள் கிடைக்கவும், ஜாதகரீதியான தோஷங்கள் கிரக ரீதியான தோஷங்கள் குடும்ப ரீதியான தோஷங்கள் அகலவும், கண் திருஷ்டி அகலவும், ஆண் பெண் வாரிசு கூடவும், குடும்ப ஒற்றுமை ஏற்படவும், நிலம் வீடு மனை மண் பாக்கியம் ஏற்படவும், தடைபட்ட காரியங்களில் வெற்றி பெறவும், நீண்ட நாள் வழக்குகளில் சுமூக தீர்ப்பு ஏற்படவும், அகால மரணம் நிகழாமல் இருக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், தற்கொலை எண்ணங்களை தடுக்கச் செய்யவும் இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், வாஸ்து தோஷங்கள் விலகவும்,போன்ற பல்வேறு காரணங்களுக்காக வருகிற 18.05.2017 வியாழக் கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு மஹா மிருத்தியஞ்சய ஹோமத்துடன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு மஹா அபிஷேகமும் அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பணம் தரும் சொர்ணகால பைரவருக்கும் மஹா பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமி யாகமும் மஹா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற உள்ளது.
23.05.2017 செவ்வாய் கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு 108 சங்குகளை கொண்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு சங்காபிஷேகமும் 25.05.2017 வியாழக் கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமமும் பகல் 12.00 மணியளவில் நெய் மிளகாய் கொண்டு சூலினி சத்ரு சம்ஹார ப்ரத்தியங்கிரா யாகமும் ப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். 29.05.2017 திங்கட் கிழமை மாலை 5.00 மணிக்குசங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீவிநாயக தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும். 31.05.2017 புதன் கிழமை வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஸ்ரீ முருகப்பெருமான் அருளால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பத்தல் மகிழ்ச்சி ஏற்படவும் குடும்ப வாரிசு எற்படவும் வம்ச விருத்தி அடையவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம் நடைபெற்று சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது..
அவ்வமையம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய் சாற்றி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பம் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க சிறப்பு கூட்டு பிரார்த்தனையும் நடைபெறும்
மேலும் விபரங்களுக்குTamil version