Benifits of 5 Homams conducted in Sri Danvantri Peedam

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி ஆரம்பத்தை முன்னிட்டு 02.10.2016 ஞாயிற்று கிழமை, பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில்

  • கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்
  • பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்
  • ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்
  • நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்
  • வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்

ஆகிய ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களும் ஐந்து விதமான ஹோம குண்டங்களில், ஐந்து அர்ச்சகர்கள் அமர்ந்து செய்தனர். இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், சிறப்பு அர்ச்சனையும், நவராத்திரி ப்ரார்த்தனையும் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் பங்கு கொண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டினர். மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images