Bhairavar Worship on Teypirai Ashtami 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீகயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கைவளம் வேண்டியும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று 25.07.2019 வியாழக்கிழமை மாலை 5.00 மணிமுதல் 7.30 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும், அஷ்ட பைரவர்சகித மஹா காலபைரவருக்கும் தச பைரவர் யாகத்துடன் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவருக்கு நடைபெறும் யாகங்களிலும், அபிஷேகங்களிலும் பங்கேற்று பைரவரை வழிபாடுவது வாழ்கையில் சிறந்த பலன்களை அளிக்கும். ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவபெருமானுடைய அம்சம் ஆவார்.

தேய்பிறை அஷ்டமி திதியியை முன்னிட்டு நடைபெற்ற இந்த யாக பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று பிரச்சனைகள் தீரவும், தொல்லைகள் நீங்கவும், நல்லருள் கிடைக்கவும், எண்ணிய காரியங்கள் நிறைவேறவும்,நல்ல மக்கள் செல்வங்களை பெறவும், உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கவும், தொழிலில் லாபம் உண்டாகவும், வழக்குகளில் வெற்றி பெறவும், எதிரிகள் விலகவும், கடன் தொல்லைகள் தீரவும், யம பயம் அகலவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும், வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பு உண்டாகவும்,திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், வறுமை நீங்கவும், பகைவர்களின் தொல்லைகள் அகலவும், பயம் நீங்கவும், பைரவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றவும்,பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறவும், வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படவும், வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறவும், வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடையவும், சனி கிரகத்தினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், வெளி நாடு வேலை வாய்புகள் கிடைக்கவும் மேலும் பல்வேறு நன்மைகளை ஏற்ப்பட கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images