வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 23.10.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை புதன் கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகவும், புதன் கிரகத்தின் அனுக்கிரகங்களை பெற்று வளமுடன் வாழவும் புதன் கிரக சாந்தி ஹோமமும் காலசக்கிர பூஜையும் நடைபெற உள்ளது.
புதன் கிரகத்தின் சிறப்பு :
புதன் கிரகம் புத்தி கூர்மை, ஞானத்தை குறிக்கும் கிரகமாகும். ஒருவர் ஜாதகத்தில் புதன் உச்சமாக இருந்தால் அவர்கள் மிகவும் புத்தி கூர்மை உள்ளவர்களும், எழுத்தாளர்கள் ஆகவும், சிறந்த பேச்சாளராகவும், பேச்சால் அடுத்தவர் மனதை மயக்குபவராகவும் இருப்பார்கள். ஒரு மனிதனுக்கு சிறந்த சிந்தனை திறன், எழுத்து மற்றும் பேச்சாற்றல், செல்வ சேர்க்கை, கலைகளில் தேர்ச்சி, சிறந்த ஞாபக திறன், ஞானம் ஆகியவற்றிற்கு புதன் பகவான் காரகனாக இருக்கிறார். புதன் கிரகத்தின் ஆதிபத்தியம் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஜாதகங்களில் சிலருக்கு புதனின் பாதகமான நிலைகளால் குழந்தைப்பேறு ஏற்படுவதில் சிக்கல் உண்டாகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புதன் கிரகத்தை வேண்டி நடைபெறும் ஹோமத்திலும், பூஜையிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.