வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று19.04.2019 வெள்ளிகிழமை காலை10.00மணிக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்ஆக்ஞைப்படி நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள் யாகம், மஹா அபிஷேகம் 23 ஆம் ஆண்டு குருபூஜையுடன் மஹேஸ்வர பூஜை, ஆண்-பெண் திருமணத்தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி ஹோமம், சந்தான கோபால யாகம்,ஸ்ரீ சத்ய நாராயண ஹோமம், ஏகரூப இராகு-கேது அன்னாபிஷேகம், அன்ன யக்ஞம், சிவ பஞ்சாட்சர யாகம் நடைபெற்றது.
சித்தர்கள்
"சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம்,பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள்
சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, இத்தகைய அற்புதமான சக்தி படைத்த சித்தர்களுக்கு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சித்தர்கள் மற்றும் மஹான்களின் அனுஷ்டானம், அதிஷ்டானங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து அங்கிருந்து ம்ருதி (புனித மண்) கொண்டு வந்து சிவ பஞ்சாட்சர யந்திரத்துடனும் மந்திரத்துடனும் 15நாட்கள் அதிருத்ர மஹாயாகம் செய்து 468 சித்தர்களுக்கு 468 சிவலிங்கம் என்ற வகையில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்து ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் பௌர்ணமி நாட்களிலும் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகளும் சித்தர்கள் யாகமும் நடைபெற்று வருகிறது. மேலும் சித்ரா பௌர்ணமியில் 468 யாக குண்டங்கள் அமைத்து 468 குண்டங்களில் சாதுக்கள், மஹாங்கள், சித்தர்கள், சிவனடியார்கள், ஜோதிடர்கள்,பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் சித்தர்கள் யாகமும், சப்த ரிஷி பூஜையுடன் மஹேஸ்வர பூஜையும், ஸ்வாமிகளின் பெற்றோரும் குருவுமான ஸ்ரீமதி கோமளவல்லி சமேத ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு 22 ஆண்டுகளாக குரு பூஜை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று 19.04.201 9 வெள்ளிக்கிழமை மேற்கண்ட சித்தர்கள் யாகமும், குழந்தை வரம் வேண்டி சந்தானகோபால யாகமும், ஆண் – பெண் திருமணத் தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி யாகத்துடன் கந்தர்வ ராஜ ஹோமமும், சிவ பஞ்சாட்சர ஹோமத்துடன் மஹா தன்வந்திரி ஹோமமும், சத்ய நாராயண ஹோமமும் மஹா யாக குண்டத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்ன யக்ஞத்துடன் ஏகரூப இராகு – கேதுவிற்கு அன்னாபிஷேகமும் 10 க்கு மேற்பட்ட சிவாச்சாரியர்கள், 500க்கு மேற்பட்ட சாதுக்கள், ஆன்மிக அருளாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பங்கேற்கும் விதத்தில் நடைபெற்றது.
மேற்படி வைபவத்தில் ஏராளமான பக்தர்கற் கலந்துகொண்டு நாளும் நன்மை தரும் 468 சித்தர்களை வணங்கி ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் பேரருளுடன் 75 பரிவார மூர்த்திகளின் ஆசிபெற பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து பங்கேற்ற பகதர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.