Chornakala Bhairava Yagam 2018

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள, ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர், மஹா பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்களும், மஹா அபிஷேகமும் இன்று 04.08.2018 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்றது.

இந்த யாகங்களில் கடன் பிரச்னையால் தவிப்பவர்கள் நிம்மதியான வாழ்வு வாழவும் கொடுத்த கடன் திரும்பி கிடைக்கவும், நலிந்த தொழில் மீண்டும் கொடிகட்டிப் பறக்கவும், வீழ்ச்சி அடைந்தவர்கள் விரைவில் வளர்ச்சி அடையவும், வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போர்கள் வெற்றிகள் பல பெறவும், வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவும், அரசியலில் மாபெரும் சாதனை செய்யவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சொர்ணாகர்ஷண பைரவர், காலபைரவர் தரிசித்து கடன் பிரச்சனை தீர பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images