Consider the welfare of the people of Kerala Special Homes

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், இன்று 21.08.2018 செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் 2.00 மணி வரை, கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு அடைந்துள்ள கேரள மாநில மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர், “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.

தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் :

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் பச்சை கல்லினால் 4அடி உயரத்தில் பாதரக்ஷை, சுதர்சன சக்கிரம், கதை, போர் வாள், சங்கு மற்றும் சக்கிரத்துடன் துடிப்புள்ள மீசையுடன் காவல் தெய்வமாகவும் மஹாராஜாவாகவும் அர்ஜுனராகவும் நின்ற கோலத்தில் 16 திருக்கரங்களுடன் வரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் புரிந்து வரும் வகையில் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனி ஆலயம் அமைத்துள்ளார் தேவர்களை அடக்கி ஆண்டவரும், மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான இவருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கார்த்தவீர்யார்ஜுன ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் இழந்த பொருட்களை திரும்ப கிடைக்க வேண்டி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கேரள மாநில மக்களின் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை :

இயற்கை சீற்றத்தினால் பாதிக்கபட்ட கேரள மாநில மக்கள் துயரத்திலிருந்து விலகவும், இயற்கையின் சீற்றம் குறையவும், நோய்கள் வராமல் இருக்கவும், நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயிலிருந்து விடுபடவும், மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும், இழந்தவைகளை பெறவும் தேவைகள் பூர்த்தி அடையவும், தடைகள் நீங்கி தொடர்ந்து நன்முறையில் செயல்படவும், சுகாதாரம், தூய்மை, இயற்கை வளம் மற்றும் செல்வ செழிப்பு பெற்று நலமுடன் வாழ தேவர்களை அடக்கி ஆண்டவரும், மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான கார்த்தவீர்யார்ஜுனரை வேண்டியும் மனநோய் உடல் நோய் தீர்க்கும் பெருமாளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டியும் சிறப்பு தன்வந்திரி ஹோமமும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமமும், விசேஷ பூஜைகளும், கூட்டு பிரார்த்தனைகளும், கேரள மாநில மக்களின் நலன் கருதி தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் சென்னை அம்பத்தூர் சாய் பக்தர் திரு. சேஷாசாய் அவர்கள் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்தின் சிறப்பு:

கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்தின் மூலம் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம். நிலம், பூமி, வீடு திரும்ப கிடைக்கும். வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வரும். முன்னோர்கள் சாபங்கள், தோஷங்கள் விலகும். பழைய பெயர், புகழ், மரியாதை மீண்டும் கிடைக்கும். மூதாதையர் நியாயமான முறையில் சம்பாதித்து கொடுத்த சொத்துக்களும் செல்வங்களும் திரும்ப பெறலாம். இழந்தவை அனைத்தும் மீண்டும் கிடைக்க பெறும். ஆதாரம் இல்லாததிற்கு ஆதாரமாக விளங்கும். வரா கடன் வசூலாகும். கல்வியில் கவனம் கூடும். இந்த யாகத்தில் 30 வகையான புஷ்பங்கள், தாமரை மலர்கள், உலர்ந்த திராட்சை பழம், முந்திரி, பாதாம் பருப்பு, பேரிச்சம் பழம், 108 வகையான மூலிகைகள், பழ வகைகள், நெய், தேன், சித்ரான்னங்கள் சேர்க்கப்பட்டு பூர்ணாஹுதி நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images