Danvantri Peedam Yaaga Thiruvilzha

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டு சகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு 36 விதமான யாகங்கள் யாகத் திருவிழா நடைபெறுகின்றன.

மேற்கண்ட வைபவம் நேற்று 26.02.2018 திங்கட் கிழமை மாலை 6.00 மணியளவில் மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, சர்வ தேவதா ஆக்வாண பூஜை, கோலக்ஷ்மி பூஜை, தீப லக்ஷ்மி பூஜை, யாகசாலை பிரவேசம், மஹா சங்கல்பம், கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், சதுர்வேத உபச்சாரம் ஆகிய விசேஷ பூஜைகள் மற்றும் ஹோமங்களுடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து இன்று 27.02.2018 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, நவக்கிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ வாசவி ஹோமம், ஆயுஷ் ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், காளி யாகம், சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், மண்ய சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், ஸ்ரீ அன்னபூரணி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, ஆகிய் பூஜைகளும் ஹோமங்களும் இரண்டு காலமாக நடைபெற்றது.

மேலும் செவ்வாய் கிழமை பூசம் நட்சத்திரத்தில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகள் அகல பெண்களின் தாயாகவும் வைத்திய ஈஸ்வரியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ மரகதாம்பிகைக்கு மங்களகௌரி ஹோமத்துடன் மாதுளம் பழம் சாறு கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்வாமிகள் திருக்கரங்களால் பக்தர்களுக்கு ஹோம பிரசாததுடன் கஷாயம் பிரசாதம் வழங்கப்பட்டது

இந்த யாகத்தில் ஸ்ரீ வடபாதி சித்தர், தொழிலதிபர் Dr.J.லட்சுமணன், துர்காபவன் உடமையாளர் திரு. உதயசங்கர், ஸ்ரீபெரும்புதூர் இராமானுஜம், விழுப்புரம் சம்பத் குமார், குடியாத்தம் விஜயகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

இதனை தொடர்ந்து நாளை 28.02.2018 புதன் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவர்ண பூஜை, கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ ராமர் ஹோமம், கருட ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் மூன்றாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

மாலை 4.30 மணி முதல் லக்ஷ்மி குபேரர் ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அஷ்ட பைரவர் சஹித காலபைரவர் ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம், ருத்ர ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் நான்காம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற பல்வேறு பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images