Dasa Bhairavar Yagam on Theipirai Ashtami at Sri Danvantri Arogya Peedam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி வருகிற 19.04.2017 புதன் கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தல் உள்ளசொர்ணாகர்ஷண பைரவர் அசிதாங்க பைரவர் ருரு பைரவர்சண்ட பைரவர் குரோதன பைரவர் உன்மத்த பைரவர்கபால பைரவர்பீக்ஷன பைரவர் சம்ஹார பைரவர் மற்றும் மகா கால பைரவருக்கு தசபைரவர்யாகமும் மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.சிகப்பு அரளி பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் மிளகு தீபமும் ஏற்றப்பட உள்ளது.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர்.தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர் என்று பொருள். தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள், தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம்.விபத்து, துர்மர்ணம் இவற்றில் இருந்து காப்பவரும் பைரவரே. அந்த அளவிற்கு பைரவர் முக்கியத்துவம் வாய்ந்தவர்.பைரவரை தொடர்ந்து வணங்கினால் தீவினைகள் அழியும். எதிரிகள் தொல்லை ஒழியும். யாருக்கும் அடிபணியாத, தலை குனியாத வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்கும். வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும். இழந்த பொருள் செல்வத்தை மீண்டும் பெறலாம். திருமணத்தடை அகலும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும் பிதுர் தோஷம் விலகும்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்புகிடைக்கும், எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம். பைரவருக்கு சிறு துணியில் மிளகை கட்டி நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வழிபட்டால், வாழ்க்கையில் வளம் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அமையும். சந்தனக்காப்பு செய்து வழிபட்டால், எந்நாளும் இன்ப நாளாக அமையும்.பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லம், பாயசம், அவல் பாயசம், உளுந்தவடை, சம்பா அரிசி சாதம், பால், பழ வகைகள் பிடித்தமானவை அவற்றை நிவேதனமாக படைக்கலாம்.இத்தகைய சிறப்புவாய்ந்த பைரவருக்கு தன்வந்திரி பீடத்தில் தேய் பிறை அஷ்டமியில் நடைபெறும் யாகத்திலும் பூஜையிலும் கலந்து கொண்டு பலன் பெற ப்ரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images