Dasa Bhairavar Yagam

தந்தையுடன் பிரச்சினையா ? தசாபுக்தி பிரச்சனையா ? அரசு சம்மந்தப்பட்ட பணியில் பிரச்சினையா ? நிலம், வீடு சொத்து பிரச்சினையா ? தாய் தந்தை உடல்நிலைப் பாதிப்பா ? மன அமைதி இல்லையா ? கல்வியில் பாதிப்பு உள்ளவர்களா ? , புத்திர வகையில் பாதிப்பா ? வாகனங் களில் பிரச்சினையா ? எதிரிகளால் தொல்லை அனுபவிப்பவர்களா ? பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்களா ? ஏவல், பில்லி, சூனியம் இவற்றால் பாதிப்பு உள்ளவர்களா ? அஷ்டலட்சுமி கடாட்சம் இல்லையா ?...... உங்களுக்காக தன்வந்திரி பீடத்தில் பல்வேறு தோஷங்கள் நீங்கி தடைகள் தீர்க்கும் பத்து பைரவர் யாகம்......வருகிற 9ஆம் தேதி மாலை நடைபெறுகிறது...

இறைவன் நம்மைக் காத்து இரட்சிப்பவன் என்று எண்ணி நாம் அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று பிரதான கடவுளை வேண்டி வணங்குகிறோம். ஆனால் அந்த ஆலயத்தில் எல்லோரும் பரிவார தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது இல்லை என்றால் மிகையாகாது. சிலர் ஆலயங்களில் உள்ள பரிவார மூர்த்திகளான ஆஞ்சனேயர், சக்ரத்தாழ்வார், சரபேஸ்வரர், கால பைரவர், தக்ஷிணா மூர்த்தி போன்ற பல வகையான மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது பரிவார மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் தேவைகளுக்காக வழிபட்டு வருகின்றோம். காக்கும் கடவுளாக உள்ள பைரவர்களுக்கு விசேஷ தினங்களிலும் தேய்பிறை அஷ்டமியிலும், ஜென்மாஷ்டமியிலும், காலாஷ்டமியிலும் சிறப்பு பூஜைகள் நம்பிக்கையுடன் செய்து வருகிறோம்.  தன்வந்திரி பீடத்தில் பல்வேறு தோஷங்கள் நீங்கி தடைகள் தீர்க்கும் பத்து பைரவர் யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவருக்கும், ஒரு கல்லில் மஹா பைரவரும் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்டஅஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், நவ பைரவர் ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் செய்து வருகிறார்.

வருகிற 09.03.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை, பல்வேறு தடைகள் நீங்க பத்து பைரவர் யாகம் நடைபெறுகிறது. இந்த யாகம் பத்து பைரவர்களுக்கு பத்து குண்டங்கள் அமைத்து பத்து சிவாசாரியர்களால் நடைபெற உள்ளது. பத்து பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும், ஸ்ரீ பத்து பைரவருக்கு செய்யும் யாகங்கள் மற்றும் பூஜைகள் ஸ்ரீ நவகோள்களுக்கு சென்றடையும்.

பல்வேறு தோஷங்கள் நீங்கி தடைகள் தீர்க்கும் பத்து பைரவர் யாகம் நடைபெறுகிறது. பத்து பைரவர் யாகத்தின் பலன்கள்:

1. ஸ்ரீ கபாலபைரவர் (ஞாயிறு): சூரிய தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சூரியன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தந்தையுடன் பிரச்சினை உள்ளவர்கள், அரசு சம்மந்தப்பட்ட பணியில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த கபால பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

2. ஸ்ரீ உருபைரவர் (திங்கள்): சந்திர தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சந்திரன் நீச்சம், வக்ரம், அஸ்தமனதோஷமுள்ளவர்கள், தாயின் உடல்நிலைப் பாதிப்பு, மன அமைதியின்மை போன்றவையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்ரீ உரு பைரவரை வணங்க பிரச்சினைகள் தீரும்.

3. ஸ்ரீ சண்ட பைரவர் (செவ்வாய்): செவ்வாய் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், செவ்வாய் நீச்சம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், சகோதரர்களிடம் பிரச்சினை உள்ளவர்கள், நிலம், வீடு சொத்து பிரச்சினை உள்ளவர்கள் இந்த சண்ட பைரவரை வழிப்பட்டால் பிரச்சினைகள் தீரும்.

4. ஸ்ரீ அசிதாங்க பைரவர் (புதன்): புதன் தசை, புதன் புத்தி நடப்பில் உள்ளவர்கள், புதன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷம் உள்ளவர்கள் தாய் மாமன் வகையில் பிரச்சினை உள்ளவர்கள், கல்வியில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த அசிதாங்க பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

5. ஸ்ரீ உன் மத்த பைரவர் (வியாழன்): குரு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு நீச்சம், வக்ரம் ஆஸ்தமன தோஷமுள்ளவர்கள், புத்திர வகையில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த உன் மத்த பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

6. ஸ்ரீ குரோதன பைரவர் (சுக்கிரன்) : சுக்கிரன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சுக்கிரன், நீச்சம், வக்ரம், அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், வண்டி வாகனங் களில் பிரச்சினை உள்ளவர்கள், கணவன், மனைவியிடையே கோளாறு உள்ளவர்கள் இந்த ஸ்ரீ குரோதன பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

7. ஸ்ரீ சம்ஹார பைரவர் (சனி): சனி தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சனி, நீச்சம் வக்ரம் அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம், அடிக்கடி ஆயுளுக்கு உரிய கண்டங்களை அனுபவிப்பவர்கள், கை, கால், பாதிப்பு உள்ளவர்கள், உடலில் அங்கஹீனம் உள்ளவர்கள், வண்டி வாகனங்களில் விபத்தை சந்திப்பவர்கள், எதிரிகளால் தொல்லை அனுபவிப்பவர்கள் இந்த சம்ஹார பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

8. ஸ்ரீ பீஷண பைரவர் (ராகு): ராகு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், ராகு நீச்சம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றில் பாதிப்பு உள்ளவர்கள், விஷத்தால் பாதித்தவர்கள் இந்த பீஷண பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

9. ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் (கேது): கேது தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், 12-ல் கேது அமையப் பெற்றவர்கள், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், கேது நீச்சம் ஆனவர்கள், எதிரிகளால் தொல்லையை அனுபவிப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியம் இவற்றால் பாதிப்பு அனுபவிப்பவர்கள், இந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷனை பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு ஸ்ரீ கேது பகவானின் ஆதிக்கத்தில் மறைபொருளாக உள்ளன.

10. மஹாகால பைரவர் : மகத்தான பலன் தரும் மஹா பைரவர் மேற்கண்ட பத்து பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும், பைரவர்களுக்கு செய்யும் யாகங்கள், நவக்கிரகங்களுக்கும், அஷ்ட லக்ஷ்மிகளுக்கும் சென்றடையும். தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் முடிந்ததும் . ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்வர்ண காசு, ஸ்வர்ண யந்திரம், ஸ்வர்ண ரக்ஷை போன்றவை ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் பிரசாதங்களாக வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்பும் ஒவ்வொரு பக்தரும் தன்வந்திரி பீடத்தில் உள்ள பத்து பைரவர்களை தரிசித்து, பத்து பைரவர் ஹோமங்களில் கலந்துகொண்டு மேற்கண்ட பிரசாதங்கள் பெற்று ஆனந்தமான. வாழ வாருங்கள் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்திற்கு. அவன் அருளால் அவன்தாள் வணங்குவோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images