Devi Mookambika Homam

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளத்திற்காகவும் வருகிற28.07.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல்12.00 மணி வரை தேவி மூகாம்பிகை ஹோமம் நடைபெற உள்ளது.

தேவி துர்கையானவள் வனதுர்கை முதல் அஸுரி துர்கை, ஜெய துர்கை, சரஸ்வதி, சாமுண்டி, ஆக பன்னிரெண்டு துர்கைகளும் ஒன்று சேர்ந்தது தேவி மூகாம்பிகையின் அம்சமாகும். ஒவ்வொரு துர்கைக்கும் ஒவ்வொரு விதமான சக்தியும், அவளின் கருணையும், அருளையும், பலனையும், எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக ஆதிசக்தி நமக்கு அருள் புரிந்துள்ளார்.

மூகன் எனும் அரக்கனை வதம் செய்ததால் அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறது. மூகாம்பிகை தேவி காளியின் அம்சமாகவும், திருமகளின் அம்சமாகவும், கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள். இவள் பத்மாசனத்தில் வீற்றிருந்து, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரணடைய தூண்டும் விதமாகவும், மற்றது வரமளித்து வாழ்த்தும் கோலத்தில் அன்னை மூகாம்பிகை காட்சியருள்கிறாள். மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். மூகாம்பிகை தேவியை அனைத்து கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள்,நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்களின் கலைத்திறன் சிறப்படைய வழிபடுவது சிறப்பாகும்.

மூகாம்பிகை ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் சகலகாரிய சித்தி பெறலாம், சர்வ வஸ்யம், ரோக நிவர்த்தி,வாக்குப் பலிதம், திருஷ்டிதோஷ நிவர்த்தி, சத்ருநாசம், நேத்ர ரோக நிவர்த்தி, எதிலும் வெற்றி, சகல சம்பத்து விருத்தி, சோகநாசம், பயம் நீக்குதல், ஞானானந்தகரம், வசீகரணம், ஆயுள் விருத்தி, புத்ர விருத்தி, வித்தை, சங்கீத விருத்தி, தனலாபம், பதவி உயர்வு, மங்களப் பிராப்தி, சஞ்சலமின்மை, சந்தோஷம், அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட லசஷ்மி கடாசஷம், தீர்க்க சுமங்கலி பிராப்தி போன்ற பல்வேறு விதமான நன்மைகளை பெறலாம்.

அன்னை மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறுகள், தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தேவி மூகாம்பிகையை வேண்டி நடைபெறும் மூகாம்பிகை ஹோமத்திலும், விசேஷ பூஜைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images