Ekadasi Homam with Nellikaipodi Tirumanjanam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி இன்று 19.03.2020 வெள்ளிக்கிழமை ஏகாதசி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் வருகின்ற 31.03.2020 திருவாதிரை நட்சத்திரம் வரை நடைபெறும் தொடர் ஹோமத்தின் முதல் நாள் ஹோம பூஜையும் நடைபெற்றது.

இதில் பால், தயிர், நெல்லிக்காய் பொடி, மஞ்சள், சந்தனம், மற்றும் பன்னீர் போன்ற திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images