Every Full Moon Pooja

பலரது குடும்பங்களிலும் இன்றைக்கு இருக்கிற பிரச்னை காலாகாலத்தில் தங்கள் வீட்டில் இருக்கிற பையன் மற்றும் பெண்களுக்குத் திருமணம் ஆகாமல் இருப்பதுதான்! இன்றைக்கு மணப்பெண் அமைவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது. பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். ஒன்று இருந்தால், இன்னொன்று அமைய மாட்டேன் என்கிறது. அதைபோன்று குழந்தை பாக்யம் இல்லாமையும் ஆகும்.

இந்த நிலையில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ள பையன்/பெண் ஆகியோரைக் கூட்டிக் கொண்டு வந்து இங்கு ஹோமம் செய்து பலன் பெறுகிறார்கள் பல பெற்றோர்கள். பலரது வாழ்க்கையிலும் கெட்டிமேள ஓசை ஒலிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி இங்கே சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.

சமீபத்தில் தன்வந்திரி குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்கவாழ் இந்தியரான திரு சீனிவாச சம்பத் அவர்கள் ஸ்ரீதன்வந்திரி பகவான் & ஆரோக்யலக்ஷ்மித் தாயார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு வெகு விமரிசையாக இந்த வைபவம் நடந்தது. திருமணம் ஆக வேண்டிக் காத்திருக்கும் ஏராளமான இளம் பிராயத்தினரும் இதில் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

நோய்க்குத் தீர்வு மருந்துதான். அதுபோல் எந்த ஒரு தோஷத்துக்கும் தீர்வு நாம் செய்கிற பரிகாரம்தான். இதுவே சிறந்த நிவாரணம். எந்த ஒரு பிரச்னை நிவர்த்தி ஆவதற்கும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து பரிகார ஹோமம் செய்து பலன் பெறுகிறார்கள்.

ஹோமங்களின்போது, பல்வேறு இயற்கைப் பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

உலகின் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்திவருகிறான் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள்பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் இறைவனுக்காக நாம் செய்வதில்லை. அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்படுவதே ஹோமங்கள். முற்காலங்களில் உலக நன்மைக்காகவும் இறைவனாக நாம் காணும் இயற்கையைக் குளிர்விக்கவுமே ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன என்பது உண்மை.

இந்த வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images