வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நாளை 27.05.2016 வெள்ளி கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும் உணவினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை ஆகியுள்ள அன்னம் அளிக்கும் ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் வடை அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு வழிபாடு செய்து வருகிற பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்க உள்ளார்.
அன்னபூரணி நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள். காசியில் இருக்கும் அன்னபூரணி இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள்.
இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார்.
அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷTamil version