GARUDA PANCHAMI SPECIAL GARUDA HOMAM

GARUDA HOMAM ON GARUDA PANCHAMI ON 13.08.2021, FRIDAY @ DANVANTRI PEEDAM BY 10.00 AM ONWARDS

Garuda Panchami is celebrated to show the never-ending bonding between Garuda and his mother, Vinita. This day is observed by mothers and sons to enhance the love and affection between them. Mothers worship the god Garuda for better health and the future of their children.

BENEFITS OF GARUDA HOMAM

Get rid of the fear of snakes and other poisonous creatures

Remove evil eye, black magic, and all other negative energy

Get cured of incurable diseases caused by the ill effects of Sarpa Dosha

Fulfill all the righteous wishes gradually

Remain free from all the worries

Gain fame, name, and wealth

Attain an increase in self-confidence and courage

Alleviate fear of snakes and other reptiles

Gain the ability to reason and make decisions to overcome all the life issues

நன்மைகள் தரும் நாக பஞ்சமியில் பாவங்களைத் தீர்த்து, பயங்களை போக்கும் கருட ஹோமம்

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற ஆடி 28, வெள்ளிக்கிழமை, 13.08.2021, கருட பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ கருட ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விரைவில் 16அடி உயர அஷ்ட நாக கல் கருடர் ஆலயம் அமைவதை முன்னிட்டும் திருப்பணிகள் விரைவில் தடையின்றி நிறைவேறவும் கருட பஞ்சமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது

தன்வந்திரி பீடத்தில் அஷ்ட நாக கருடன்

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் அஷ்ட நாகங்களுடன் கருட பகவான் எழுந்தருளி அருள்பாவிக்கின்றார் இவருக்கு பிரதி வாரம் வியாழக்கிழமை தேன் அபிஷேகமும், அமுத கலச பூஜையையும் பக்தர்களின் நலனுக்காக நடைபெற்று வருகிறது. மேலும வாகன விபத்துக்கள் பச்சை தோஷங்கள் நீங்க கருட ஹோமம் பஞ்சமி நாட்களில் நடைபெற்று வருகிறது. இவருக்கு கருட பஞ்சமியில் சிறப்பு ஆராதனைகள் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி நடைப்பெற்று வருகிறது அந்த வகையில் வருகிற 13.08.2021 வெள்ளிக்கிழமை வரும் கருட பஞ்சமியில் சிறப்பு கருட ஹோமமும், தேன் அபிஷேகமும் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.

கருட பஞ்சமியின் சிறப்பு

நாகத்துக்கும் கருடனுக்கும் வழிபாட்டில் முக்கியத்துவம் உண்டு. இறைத்திருவுருவங்களுடன் தொடர்பு கொண்டதாகத் திகழும் நாகத்துக்கும் கருடருக்கும் சிறப்பு வழிபாடுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆடி மாதத்தின் வளர்பிறையில், சதுர்த்தி நாள் நாக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. வழிபடப்படுகிறது. அதேபோல், சதுர்த்திக்கு அடுத்தநாளான பஞ்சமி, கருடனை வணங்குவதற்கு உரிய நாளாக, போற்றுவதற்கு உரிய நாளாக, பிரார்த்தனை செய்து கொள்வதற்கான நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதை கருட பஞ்சமி என்கிறார்கள்.

பறவைகளின் தலையாயப் பறவையாக இருக்கும் பறவையை பட்சிகளின் ராஜா என்பார்கள். பட்சி என்றால் பறவை என்று அர்த்தம். அப்படி, பறவைகளின் தலைவனாகத் திகழ்வது கருட பட்சி. கருடனே பட்சிகளின் ராஜா. அதனால்தான் கருட பட்சியை வணங்குகிறார்கள் பக்தர்கள்.

வைஷ்ண ஆலயங்களில், விழாக் காலங்களில், பெருமாள் கருட வாகனத்தில் அழகு ததும்ப வருவதை தரிசித்திருப்போம். மகாவிஷ்ணுவின் திருவடியைச் சரணடைவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பக்தி செலுத்தச் சொல்கிறது விஷ்ணு பாகவதம். அப்படி பெருமாளின் திருவடியைச் சரணடைந்த கருடனை, கருடாழ்வார் என்றும் பெரிய திருவடி என்றும் போற்றுகிறோம். பெரிய திருவடியான கருடாழ்வாரை வணங்கும் நன்னாளாக அமைந்ததுதான் ‘கருட பஞ்சமி.

ஆடி மாதம் என்பதே பெண்கள் வழிபடுவதற்கு உரிய மாதம். ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாக சதுர்த்தி என்பவையெல்லாம் பெண்கள் அவசியம் வழிபடவேண்டிய நாட்கள். பண்டிகைகள். விரதங்கள். இதேபோல், கருடபஞ்சமி என்பதும் பெண்கள் அவசியம் வணங்கி வழிபடவேண்டிய நாள். யார் வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும் பெண்கள் அவசியம் வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

கருட ஹோமத்தின் சிறப்பு

பெரிய திருவடி கருடாழ்வார், மாங்கல்ய பலம் தந்தருள்வார். மாங்கல்ய தோஷம் நீக்குவார். கணவரின் நோய் தீர்த்து ஆரோக்கியம் அருளுவார். வீட்டில் மங்கல காரியங்கள் நிகழச் செய்வார். கடன் முதலான தரித்திர நிலைகளில் இருந்து சுபிட்ச நிலையை உண்டு பண்ணுவார். வாகன விபத்துகள் நேராமல் தடுத்தருள்வார் கருடாழ்வார். மனதில் தேவையற்ற பயமெல்லாம் விலகிவிடும். மனோதைரியம் தருவார். கருட பஞ்சமி நாளில், கருடாழ்வாரைப் பிரார்த்தனை செய்யுங்கள். கவலையெல்லாம் பறந்தோடச் செய்வார் பட்சி ராஜா. பாவங்களெல்லாம் விலகி புண்ணியங்கள் பெருகும்.

அடிக்கடி பாம்பு எதிர்ப்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கருட பஞ்சமியில் நடைபெறும் கருட ஹோமத்தில் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் பங்கேற்று கருட பகவானை தரிசனம் செய்து தோஷம் நிவர்த்தி பெறலாம். மேலும் ஏழரை சனி, கண்ட சனி போன்ற கோச்சார சனி நடப்பவர்கள் கருட பஞ்சமியன்று வணங்கி வழிபட தோஷங்கள் நீங்கும்.

பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை குறையும், சகல தோஷங்களும் விலகும். மாங்கல்ய பலம் பெருகும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். தொழில், உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

MORE DETAILS PLEASE CONTACT 94433 30203

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images