Gholakshmi Thirukallyanam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வருகிற ஆடி மாதம் 5ம் தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் வீட்டிற்கு பயன்தரும் கோமாதா என்ற பசுவிற்கும் நாட்டிற்கு பயன் தரும் ரிஷபராஜா என்ற காளைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

பசு மனிதர்களுக்கு தாயும் தந்தையும் போன்றது. பசுவை வணங்கி போற்றுபவன் பிரம்மதேவனையும் தனது பெற்றோர்களையும் வணங்குபவனாகிறான். சிவபெருமானின் வாகனமான நந்தியின் வாரிசுகள் தான் காளைகள். நந்தி நன்மைகளின் சொரூபம், வம்ச விருத்தியின் அடையாளம் மற்றும் விவசாயிகளின் உற்ற நண்பர் எனலாம். இத்தகைய பெருமைகளுடன் நம்முடன் வாழும் பசுவிற்கும் காளைக்கும் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிளின் ஆக்ஞைப்படி தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட திருமண மகோத்சவம் நடைபெற உள்ளது. இவ் வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள் அஷ்ட வசுக்கள், மற்றும் நவக்கிரகங்களின் ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.

மக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர் கோ என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன் மற்றும் உலகம் என்று பொருள் சொல்லப்படுகிறது ஸ்ரீ.ராமபிரான், ஸ்ரீ மஹா விஷ்ணு பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜை தான் என்கிறது புராணங்கள்.

மேற்கண்ட திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வருகிற 20.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு சிவ பார்வதி யாகத்துடன் ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமமும் நடைபெற்று மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும் 7.00 சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் அறுசுவை விருந்தும் நடைபெற உள்ளது. 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு தம்பதி பூஜையும் 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மாங்கல்ய தாரணமும் நடைபெற உள்ளது. இதினை தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை 150 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்று நடத்தும் நாத சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். இதினை முன்னிட்டு வேலூர், ஆர்க்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி மார்கமாக செல்லும் அனைத்து அரசு புறநகர மற்றும் மாநகர பேருந்துகளும் கீழ்புதுபேட்டை உள்ள தன்வந்திரி பீடம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் நின்று செல்ல அனுமதி பெறபட்டுள்ளது (தடம் எண் : 400, 162, 160, 161, 408, 444, 324, 222, 111). இந்த வாய்ப்பினை பக்தகோடிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images