வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலைஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம்ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல்2.00 மணி வரை கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை, சமஷ்டி உபநயனம் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி நடைபெற்றது.
கோமாதாவை போற்றி வணங்கும் விதத்திலும், முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமானதோஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவராசிகளின் நலன் வேண்டி கோமாதாவிற்கும் நந்தி பகவானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சம்பிரதாய பூஜையாக, பாரம்பர்யத்தை போற்றும் விதமாகவும், மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெறவும், பித்ருக்களின் விருப்பங்கள் நிறைவேறவும், குழந்தை பாக்யம், கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நிறைவான வாழ்வு வேண்டியும், அனைத்து பக்தர்களுக்கும் மேற்கண்ட தெய்வங்களின் அனுக்கிரகம் வேண்டி 300 க்கும் மேற்பட்டம் சுமங்கலிகள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு ஸ்வாமிகள் ஆசிகளுடன் பாதபூஜை செய்து, புது வஸ்திரத்துடன் மங்கள பொருட்கள் அளித்து அன்னதானம் வழங்கப்பட்டது.
வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வுசிறக்கவும் மணிபூணல் சமஷ்டி உபநயனம் நடைபெற்றது. இதில் இரத்தினகிரி தவத்திரு. பாலமுருகனடிமை ஸ்வாமிகள், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. இல.கணேசன், கலைமாமணி. திரு. ஏற்வாடி .S.ராதாகிருஷ்ணன், சென்னை திரு, தங்கராஜ், சென்னை திரு. அன்பழகன், சென்னை திரு. அசோகன் அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜை பிரசாதங்களுடன் சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.
இதனை தொடர்ந்து நாளை 14.03.2019 வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரைஒவ்வொருவருக்கும் மஹாவிஷ்ணு - மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவி –நெல்லிராஜா ( துளசி செடி – நெல்லி செடி ) திருக்கல்யாணமும், பெண் சாபங்கள் நீங்கவும், குலதெய்வதோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில் சுபிட்சம் ஏற்படவும், சுப காரியங்கள்நடைபெறவும் 108 கன்னிபெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜை நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரிகுடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version