Guru Graha Shanti Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதி வருகிற08.08.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குரு கிரக சாந்தி ஹோமமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

குரு பகவான் புத்திரகாரகர் மற்றும் தனகாரகர் ஆவார். இவர் செல்வம், ஞானம், உயர்ந்த குண நலன்கள், நேர்மை,நம்பிக்கை, மற்றும் விருப்பத்தை குறிப்பவர். இவர் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடைபெறும் ஹோமமே குரு கிரக சாந்தி ஹோமம் ஆகும். குரு கிரகம் வெற்றிக்கான கிரகம் என்று ஜோதிட சாஸ்திராம் கூறுகிறது. இவரை வழிபட்டால் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும், கற்பனை சக்தி அதிகரிக்கும், அறிவுத்திறன் பெறலாம் மற்றும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும்.

குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் சாதகமற்ற வீட்டில் காணப்படுவது குரு தோஷத்துக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக ஏற்படும் எதிர்மறை விளைவுகள், இந்த ஹோமம் செய்வதன் மூலம் நீங்கி, சாதகமான பலன்கள் விளையும். இது, உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றி அமைதுது, வாழ்வில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.

இதில் நெய், தேன், நவசமித்துக்கள், மஞ்சள் நிற வஸ்திரங்கள், மூக்கடலை, நவதானியங்கள், மஞ்சள் நிற புஷ்பங்கள், பழங்கள், விசேஷ நிவேதனங்கள், மூலிகைகள் சமர்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி போன்ற பஞ்ச திரவிய அபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்று பங்கேற்கும் பக்தர்களுக்கு இறை பிரசாதம் வழங்க உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நெய், தேன், மூலிகைகள், சமுத்துகள், மஞ்சள் நிற புஷ்பங்கள், நிவேதன பொருட்கள், மளிகை பொருட்கள், மஞ்சள், குங்குமம் அளித்து இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images