Guru Peyarchi 2017

பெற்றோர்களை குருவாக ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியான கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 75 சன்னதிகள், சிவலிங்கரூபமாக 468 சித்தர்கள், மற்றும் பெற்றோர்களுக்கும் ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். குரு பீடமாக பக்தர்களால் போற்றும் விதத்தில் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்துள்ளார். இப்பீடம் வேலூர் வாலாஜாபேட்டையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் அருகில் அமர்ந்த நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

468 சித்தர்கள் ஸ்தலம்:

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் , சித்தர்கள் ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் எட்டு திக்குகளிலும் திரு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி 9 அடி உயரத்தில் 46 லட்சம் பக்தர்கள் கைபட எழுதிய 54 கோடி தன்வந்திரி மந்திரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார். ஷண்மதங்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் இரண்டு லட்சம் கிலோ மீட்டர் கரிக்கோலம் வந்து 63 திவ்ய தேச பெருமாளின் அபிமானத்தை பெற்றவர். மருத்துவ அவதாரம் என்பதால் பிணி தீர்க்கும் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். சக்ர பீடம், யந்திர பீடம், மந்திர பீடம், சஞ்சிவி பீடம், யக்ஞ பீடம், சித்தர்கள் பீடம், துர்கா பீடம், காயத்ரி பீடம் என்று பல பெயர்களில் பக்தர்கள் இப்பீடத்தை அழைப்பதுண்டு. நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி:

குருபகவான் தன்வந்திரி ஆலயத்தில் வல்லலார், இராகவேந்திரர், காஞ்சி மஹா பெரியவர், சீரடி சாயிபாபா இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இவருக்கு இந்த பீடத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி ஆகஸ்டு 2

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images