வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி குரு பூர்ணிமா முன்னிட்டு இன்று 16.07.2019 செவ்வாய்கிழமைகாலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக மக்கள் நலன் கருதியும், பல ஆண்டுகளாக உள்ள குலதெய்வ குறைபாடுகள் நீங்கவும் காவல் தெய்வமான ஸ்ரீ முருகப்பெருமானின் அருள் வேண்டியும், மனக்குறை போகவும், சாபங்கள், தோஷங்கள் அகலவும், குரு மஹான்கள் ஆசிர்வாதம் வேண்டியும் புவனேஸ்வரி ஹோமமும், புத்திரபாக்ய யாகமும், திருமண பிராப்தி வேண்டி திருமண ஹோமமும் விசேஷ பூஜைகளும், குரு மஹான்களுக்கு விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வீடு, நிலம் வாங்கவும், விவசாயம் விளைச்சல் பெறவும், பலசாபம் விலகவும்,குடும்ப ஒற்றுமை, இரத்தம் சம்பந்தபட்ட நோய்கள் விலகவும், சுபிக்க்ஷம் அடையவும், பூமி வழி லாபம் ஏற்படவும், புதிய வீடு கட்டவும், சகோதர, சகோதரி ஒற்றுமை அமையவும், நல்ல மக்கள் பேரும், நல்ல மனைவி குழந்தை அமையவும், தீராத தடைகள் தீர்ககவும், திருமணம், குழந்தை பாக்யம் பெறவும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறைபிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.