வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
அமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 23.12.2022 தேதி வெள்ளிக்கிழமை அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறப்பு ஹோமம், அமாவாசை யாகம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் பால்,பன்னீர்,நெல்லிப்பொடி,சந்தனம்,மஞ்சள் போன்ற விசேஷ திரவியங்களை கொண்டு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.
இதில் அனைவருக்கும் சகல மங்கலங்களும் உண்டாகவும்,நவகிரக தோஷங்கள் விலகவும், நினைத்த காரியம் கைகூடவும், துன்பம் விலகவும், குடும்பத்தில் இன்பம் பெருகவும் கூட்டு பிரார்த்தனை நடைப்பெறவுள்ளது தொடர்ந்து வருகைபுரியும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கப்படவுள்ளது
Tamil version