Homams and Special poojas Nadaipetradhu

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 08.02.2020 சனிக்கிழமை பௌர்ணமி மற்றும் தைபூசத்தை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபர்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், ஸ்ரீ வள்ளலார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு விசேஷ ஹோமத்துடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை அன்னதோஷங்கள் விலக ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், வாழ்வில் நலம் பெற சித்த புருஷர்கள் ஆசிகள் வேண்டி சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த யாகங்களில் நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், வஸ்திரங்கள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் ஆராதனைகள் நடைபெற்று, கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் சுயம்வர கலாபார்வதி ஹோமத்தில் பங்கேற்ற ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. மேலும் சந்தான கோபால யாகம் நடைபெற்று ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று பங்கேற்ற தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் தைபூசத்தை முன்னிட்டு ஸ்ரீ வள்ளலார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு மூல மந்திர ஹோமங்களுடன் பஞ்ச திரவிய அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி பிராசதங்களை வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images