Jayanthi Festival

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலைமதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞை படி வருகிற 03.12.2017 ஞாயிற்று கிழமை அன்று காலை 10.00 மணி முதல் தத்தாத்ரேயர் ஜெயந்தி விழா தத்தாத்ரேயர் ஹோமத்துடன் சிறப்பாக நடைபெற உள்ளது.

தத்தாத்ரேயர் வரலாறு :

இறையருளால், மும்மூர்த்தியர் அம்சமாக அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் அவதரித்தவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். இடபமும், அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன.

உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள். அனுசுயாதேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.

அத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன் என்றும், விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால் தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.

வருகிற 03.12.2017 ஞாயிற்றுகிழமை அன்று தத்த ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தத்தாத்ரேயர் ஹோமத்துடன் மகா அபிஷேகமும், நாம அர்ச்சனையும், குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு விசேஷ பால் பிரசாதம் வழ்ஹங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெற்றுள்ளது என்று கூறுகிறார் கயிலை ஞானகரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேற்கண்ட யாகத்தில் பங்கேற்று பலன் பெற அன்புடன் அழைக்கின்றோம். ஸ்ரீ தத்தாத்ரேய காயத்ரி மந்திரம் :
Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images