வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 10.12.2017 ஞாயிற்றுகிழமை காலாஷ்டமியை முன்னிட்டு ஸ்வணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் மற்றும் மஹா பைரவருக்கு விசேஷ பூஜைகளும், மஹா ஹோமமும், மஹா அபிஷேகமும் நடைபெற்றது.
பைரவர் காலாஷ்டமியை முன்னிட்டு 10.12.2017 ஞாயிற்றுகிழமை கால பைரவர் அருள் கிடைக்கவும் பிதுர் தோஷம், திருமணத்தடை விலகவும், வியாபாரம் செழிக்க, வழக்கில் வெற்றி பெற, குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெற, செல்வச் செழிப்பு ஏற்பட, சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க,பிரம்மஹத்தி தோஷம் நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க, பில்லி, சூன்யம், திருஷ்டி அகல, அக்கம் பக்கத்தவர்களின் தொல்லைகள் அகல, யமபயம் நீங்க,வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், தச பைரவர்களுக்கு யாகங்கங்களும், அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் நடைபெற்றது.
இந்த யாகத்தில் பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டு பைரவர்களை தரிசித்தனர். ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்வர்ண காசு , ஸ்வர்ண யந்திரம், ஸ்வர்ண ரக்ஷை போன்றவை ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் பிரசாதங்களாக வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version