Kaariyasithi Homam

ஹோமங்களின்போது, பல்வேறு இயற்கைப் பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

உலகின் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்திவருகிறான் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள்பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் இறைவனுக்காக நாம் செய்வதில்லை. அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்படுவதே ஹோமங்கள். முற்காலங்களில் உலக நன்மைக்காகவும் இறைவனாக நாம் காணும் இயற்கையைக் குளிர்விக்கவுமே ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன என்பது உண்மை. இந்த வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images