Kodi Jaba Sudharshana Maha Danvantri Yajna

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் ஸ்ரீ சுதர்சன பெருமாளின் அனுக்கிரகம் வேண்டி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், அருளானைப்படி வருகிற 28.08.2019 புதன்கிழமை முதல்03.11.2019 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை ஸ்வாமிகளின் 59 ஆவது ஜெயந்தி விழா, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா, குரு பெயர்ச்சி விழா முன்னிட்டு கோடி ஜப சுதர்சன மஹா தன்வந்திரி யக்ஞம் வெகு விமர்சியாக நடைபெறுகிறது.

தன்வந்திரி ஹோமம் :

பிரபஞ்சத்தின் காக்கும் கடவுளும், தெய்வீக ஆயுர்வேத மருத்துவரும், விஷ்ணுவின் அவதாரமாக விளங்குகின்ற தன்வந்திரி பகவானின் ஆசிகளைப் பெற வேண்டி நடத்தப்படுகின்ற ஹோமமே ஸ்ரீ தன்வந்திரி ஹோமமாகும். ஹோமத்தின் பொழுது வெளிப்படும் அதிவேக ஆற்றல்கள் சக்தி வாய்ந்ததாகும். இந்த ஹோமம் பக்தர்களுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்து நோய் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளை நீக்கும் வல்லமை கொண்டதாகும். இந்த ஹோமத்தின் மூலம் தன்வந்தரி பகவானின் பரிபூரண அருளைப் பெற்று, நோயற்ற நீண்ட ஆயுளைப் பெறலாம்.

தன்வந்திரி ஹோமத்தில் சீந்தில் கொடி, தர்பை, வன்னி, எருக்கன், அரசு, ஆலம், நாயுருவி போன்ற கல்ப மூலிகைகளும் திப்பிலி, சுக்கு, சிவனார் வேம்பு, சிவகரத்தை போன்ற பல நூறு மூலிகை திரவியங்கள் நெய், தேன், நவதானியம், சேர்க்கப்படுவதால் அதிலிருந்து வெளி வரும் மூலிகை புகையை நாம் சுவாசிக்கும் பொழுது சுவாசத்தின் வழியாக இரத்தத்தில் கலந்து நம் இரத்தத்தை சேதப் படுத்தும் கிருமிகளை அழிக்கின்றது. இதனால் நோய்கள் விரைந்து குணமாகிறது ஒரு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்து மூளைக் கோளாறு, நரம்பு கோளாறு போன்ற சகல விதமான பிணிகளும் உடல் சம்பந்தப்பட்ட எதிர்மறை அம்சங்களும் நீங்கி நோய்களுக்கு சக்தி வாய்ந்த தீர்வு ஹோமத்தின் மூலம் கிடைக்கிறது என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

சுதர்சன ஹோமம்

பயம், விரக்தி, துர்சொப்னம், மாந்த்ரீகம், மந்தபுத்தி போன்ற பல்வேறு துன்பங்கள், தோஷங்கள் அகலவும், எதிர் மறை எண்ணங்கள் விலகவும், நேர்மறை சக்திகள் மூலம், உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தவும்,சாபங்கள் விலகவும், எதிரிகளை வெல்லும் வலிமை கிடைக்கவும், தன்னம்பிக்கை வளரவும், வாழ்வில் வளர்ச்சி,வெற்றி, வளம், மகிழ்ச்சியால் வாழ்க்கை சிறக்கவும், பசுக்கள் ஆரோக்யமாக இருக்கவும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் ஹோமமே சுதர்சன ஹோமமாகும்.

காக்கும் கடவுள் மகா விஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்த சக்தி வாய்ந்த ஆயுதம், பெரும் ஆற்றல் வாய்ந்தது. தீயதை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியவரே சுதர்சனாழ்வார் ஆவார். சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம்மே, சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

நம்மைச் சூழ்ந்துள்ள தீய சக்திகளை அழித்து, நன்மைகள் பல நிறைந்த ஒரு பெரும் பாதுகாப்பு சக்தியாக நம்மைக் காத்து நிற்கும். வாழ்க்கையில் வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி போன்றவற்றை விரும்புபவர்களுக்கு, இந்த ஹோம வழிபாடு மிகச் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. இந்த ஹோமத்தின் மூலம் நம்மை சூழ்ந்துள்ள இருளும்,அறியாமையும் விலகும். நேர்மறை ஆற்றல், நமக்குள் நிறையும். நன்மைகள் பெருகி, நல்வாழ்வு வாழ்வு பெறலாம் என்கிறார் பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த யாகத்திற்கு பங்கேற்க விரும்பும் பக்தர்கள், யாகத்திற்கு தேவையான புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய்,தேன், அபிஷேக திரவியங்கள் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images