வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், உலக நலன் கருதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் இன்று 19.07.2018 வியாழக்கிழமை கொடிய நோய்கள் நீங்க கோடி ஜப யக்ஞம் துவங்கியது. இதனை முன்னிட்டு காலை 6.30 மணியளவில் மங்கள இசை, 6.45 மணிக்கு கோ பூஜை, 7.00 மணிக்கு கலச பூஜையுடன் மஹா கணபதி ஹோமம், 9.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்று ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு நவகலச திருமஞ்சனமும் நடைபெற்றது. தொடர்ந்து 27 கலசங்கள் கொண்டு மஹா தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் துவங்கியது. இதில் வேலூர், தென்னிந்திய புரோகிதர் சங்கம் தலைவர், திரு. சீதாராமன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மஹா தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் 28.10.2018 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 100 நாட்கள் சர்வ ரோக நிவாரணம் பெறவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பிராப்தி வேண்டியும் நடைபெறுகிறது. நோய் தீர்த்து காக்கும் கடவுளான ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளை வேண்டி சர்வ ரோக நிவாரணம் பெறவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பிராப்தி வேண்டியும் ஸ்வாமிகளிடம் தீக்ஷை பெற்ற சீடர்களால் நடைபெறும். இவ்வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டுகிறோம்.
தன்வந்திரி ஹோமத்தின் பலன்:
ஒரு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் யாகம் இது. இவை மட்டுமல்லாமல் தன்வந்திரி பெருமாளின் அனுக்கிரகத்தையும், அருளையும் கூட்டித் தரும் யாகம். ஒவ்வொரு மனிதனின் மனதைக் கட்டுக்குள் அடக்கி, ஆசைக்கு அணை போடும் ஹோமம் ஆகும். அதிகமாக உண்ணாது உடலுக்கு ஏற்ற தேவையான உணவை மட்டும் உண்ண வைக்கும் அதீத யாகம் இது. இந்த யாகத்தை முறையாக செய்து கொள்பவர்களுக்கு மூளைக் கோளாறு, மூளை நரம்பினால் ஏற்படும் கோளாறு போன்ற கபால நோய்கள், வாத சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். மற்றும் உடல் ரீதியான நோய்களுக்கும் மன ரீதியான நோய்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும்.
ஸ்ரீ தன்வந்திரி பகவான் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. கலி காலத்தில் மக்கள் நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களுடன் அழியா சொத்தாக தோன்றிய அற்புத ஆரோக்ய பீடம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version