வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்ட்டை செய்துள்ள மேதா தட்சிணாமுர்த்திமிகவும் பிரசித்தி வாய்ந்தது.
பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன்.ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் குருதான்.குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடப்பெயர்ச்சியடைகிறார்.குருபகவான் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர்.
நம் வாழ்வில் மிக முக்கியமானவை இரண்டு உள்ளது. தனம் என்று சொல்லக்கூடிய பணம், புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு பகவான் தான்.திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள். குருவின் அருள் இருந்தால் தான் ஞானம், கூர்ந்த மதிநுட்பம், ராஜாங்க யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்ற பல துறைகளில் பிரகாசிக்கலாம்.எனவேதான் குரு பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும்.ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.குரு பார்வை கோடி நன்மை குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி.குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
இவர் வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று 2.08.2016 செவ்வாய் கிழமை காலை சுமார் 9.30 மணியளவில் குருபகவான் சிம்மராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். இடப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு தன்வந்திரிபீடத்தில் இன்று மஹாயாகம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர் இன்று காலை 9.00 மணியளவில் கோ பூஜையுடன் துவங்கிய இந்த யாகத்தில் குருபகவானுக்குரிய கொண்டகடலை, 108 விதமான திரவியங்கள், மஞ்சள்நிற வஸ்திரங்கள், நெய், தேன், முல்லைபூ, இனிப்பு வகைகள் பலவகையான பழங்கள் யாகத்தில் சேர்க்கப்பட்டன.. இறுதியில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் இயற்கை வளம் பெறவும் தொழில் வளம் சிறக்கவும் பொருளாதரம் நிலை உயரவும் விவசாயிகள் வியாபாரிகள் சிறக்கவும் ஜோதிடர்களுடைய பலிதம் பெறவும் திருமணம் குழந்தைபேறு நிலம் வீடு மனைஅமையவும் வேலையில்லாத் திண்டாட்டம் அகலவும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு நவகலச திருமஞ்சனமும் நடைபெற்றது.ஆடி அமாவாசை ஆடிபெருக்கு முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகமும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானத்துடன் தன்வந்திரி யந்திரம் பிரசாதமாக வழங்கப்பட்டது.இந்த யாகத்தில் சென்னை டாக்டர் இரங்கராஜன் டாக்டர் மாயா சேலம் தொழில் அதிபர் திரு.மனோகரன் கே.பி.என். மேலாலர் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் சுற்றுப்புர கிராம மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.இதனை தொடர்ந்து வருகிற 11.08.2016 திருக்கணிதப்படி இரவு 8.30 மணியளவில் குருப்பெயர்ச்சி மஹாயாகம் நடைபெறுவதாக ஸ்தாபகர் கயிலை டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
Tamil version