இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் நோய் அச்சம் விடுபடவும் சென்ற 26.04.2020 ரோகிணி நக்ஷத்திரம் ஞாயிற்றுக்கிழமை முதல் 03.05.2020ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி பூரம் நக்ஷத்திரம் வரை லக்ஷ ஜப மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு பால், தயிர், நெல்லிப்பொடி, திரவியப்பொடி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனையும் ஆராதனைகளும் பீடத்தில் தங்கி வரும் அர்ச்சகர்களை கொண்டு நடைபெற்றது. இந்த ஹோம பூஜைகளில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.