லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமம்
27 நாட்கள் 27 கலசங்கள் 27 விதமான விஷேச மூலிகைகள் கொண்டு
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் இன்று 28.06.2023 காலை துவங்கியது
நாள் 28.06.2023 புதன்கிழமை - 24.07.2023 திங்கள் கிழமை வரை
நேரம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் உலக நலன் கருதி ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி முதல் 27 நாட்கள் 28.06.2023 ஆனி 13, புதன்கிழமை தசமி திதி சித்திரை நட்சத்திரம் முதல் துவங்கி 24.07.2023 ஆடி 8, திங்கட்கிழமை சப்தமி திதி அஸ்தம் நட்சத்திரம் வரை 27 கலசங்கள் கொண்டு 27 விஷேச திரவியங்களுடன் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமம் விஷேச திருமஞ்சனம் நடைபெறுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் 16 திருக்கரங்களுடன் சிரித்த முகத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் என்று அழைக்கப்படும் சுகம் பல தரும் ஸ்ரீ சுதர்சன ஆழ்வாருக்கு நடைபெறும் இந்த யாகத்தில் மூலம் மனதில் ஏற்படும் பயம், குழப்பம் நீங்கி எதிரிகள் சத்ருக்கள் தொல்லைகள் அகலும், பசுக்களின் ஆரோக்யம் பெருகும், பதவி உயர்வு கிடைக்கவும், பணி மாற்றம் கிடைக்கும், பேராபத்து நீங்கும், ஆயுள் பயம் நீங்கி ஆரோக்யம் அதிகரிக்க செய்யும். நட்சத்திர ரீதியான கிரக ரீதியான தோஷங்கள் குறையும். மேலும் பல்வேறு நன்மைகள் பெற தன்வந்திரி பீடத்தில் 27 நாட்களுக்கு 27 கலசங்களுடன் நாயுருவி, வெண்கடுகு, விளாமிச்சை வேர், மஞ்சள் கிழங்கு, பசும் சாணம், பசு நெய், பர்படாகம், சீந்தில் கொடி, வலம்புரி, இடம்புரி, கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், வெள்ளெருக்கம், பட்டு நூல், பலாசு, நவசமித்துக்கள், தேன், தாமரை விதைகள், தாமரை மலர்கள் போன்ற 27 விதமான மூலிகைகளைக் கொண்டு லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமமும் கலச திருமஞ்சனமும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி தினசரி கோ பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு 9443330203