அழகாபுரியாகவும், ஐஸ்வர்ய பீடமாகவும், திகழும் வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்களின் நலன் கருதி இன்று07.05.2019 செவ்வாய்க்கிழமை அக்ஷய திரிதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹாயாகத்துடன், ஷோடஷ திரவிய அபிஷேகம் நடைபெற்றது.
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, "அக்ஷய திருதியை" எனப்படுகிறது. 'அக்ஷயம்'என்றால் வளர்வது என்று பொருள். அக்ஷய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு. அதனால் அக்ஷய திருதியை அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.
லட்சுமி குபேரர் யாகம் அக்ஷய திருதியை முன்னிட்டு ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு 16 கலசங்கள் வைத்து தாமரை மணிகள், தாமரை புஷ்பங்கள், தேன், நெய் மற்றும் பலவிதமான விஷேச புஷ்பங்கள், திரவியங்கள் கொண்டு மாபெரும் ஸ்ரீ குபேர லஷ்மி யாகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு பால், தயிர், கரும்பு சாறு, இளநீர், பஞ்சாமிருதம், சொர்ண தீர்த்தம், புஷ்ப தீர்த்தம், சந்தனம், பன்னீர், மஞ்சள், விபூதி, அபிஷேக பொடி போன்ற 16 விதமான திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகமும் 1008 சொர்ண பைரவர் காசுகளை கொண்டு மகா அர்ச்சனையும் ஸ்ரீ குபேர யந்திர பூஜையும் நடைபெற்றது. மேற்கண்ட வைபவங்களை தொடர்ந்து மாங்கல்ய சரடு, குடை, எண்ணெய், பூ, அரிசி, வஸ்திரம், தேன், நெல்லிக்காய், விதை வித்துகள், தாம்பூலம் போன்ற பொருட்கள் தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.