வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று கூடாரவல்லியை முன்னிட்டு ஹோமத்துடன் மாங்கல்ய பூஜை நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை ஆண்டாள் பாசுரங்களை பாராயணம் செய்வதும் சுதர்சன் ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், சூக்த ஹோமம், ருத்ர ஹோமம், காலபைரவர் ஹோமம் போன்ற ஹோமங்களும், வைகுண்ட ஏகாதசி, சொர்கவாசல் திறப்பும் மாரகழி திருவாதிரை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று 11.01.2018 காலை முதல் கூடாரவல்லியை முன்னிட்டு கோபூஜையுடன் வேத பாராயணம், பாசுரங்கள் பாராயணம், சிறப்பு ஹோமத்துடன் ஸ்ரீ தன்வந்திரி பெருமளுக்கும் ஆரோக்ய லக்ஷ்மிக்கும் புஷ்பாஞ்சலியுடன் துளசி அர்ச்சனை, குங்குமார்ச்சனை நடைபெற்று அக்காரைவரைசல் எனும் பாயசத்துடன் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாங்கல்ய பூஜை :
திருமணம் ஆகாத பெண்கள் தாங்கள் விரும்பும் நல்ல மணமகனைப் பெறுவதற்கும் திருமணமான பெண்கள் கணவனுடன் நல்லன்போடு குடும்பம் நடத்தவும் தம்மை விட்டு பிரியாமல் இருக்கவும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்கவும், தன்வந்திரி பீடத்தில் உள்ள நவகன்னி சன்னதியிலும் ஆரோக்ய லக்ஷ்மி சன்னதியிலும் மஞ்சள், கும்குமம், மாங்கல்ய சரடு போன்ற சௌபாக்ய பொருட்களை வைத்து ஆண்டாள் நாச்சியாரை பிரார்த்தனை செய்து இங்கு உள்ள அத்திமரத்தினை வலம் வந்து மாங்கல்ய சரடு கட்டும் மாங்கல்ய பூஜை செய்தனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு சௌபாக்ய பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மார்கழி மாத சிறப்பு :
தட்சிணாயன புண்ணிய காலத்தின் இறுதி மாதமான மார்கழியில் பல யாகங்கள் செய்வதை விடவும் அனைத்து புண்ணிய நதிகளிலும் தீர்த்தங்களில் நீராடுவதை விடவும் அதிகமான புண்ணிய பலன்களை இந்த மாதத்தில் மேற்கொள்ளும் பகவான் வழிபாட்டின் மூலம் பெற முடியும்' என்று புராணங்கள் கூறுகின்றன.
மாதங்களில் சிறந்தது மார்கழி. அதை தனுர் மாதம் என்றும் போற்றுகிறோம். மார்கழி மாதம் தேவர்களின் நேரமான விடியற்காலையில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாதமான் மார்கழி மாத ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள்.
மாதம் முழுவதும் வழிபட்டால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது கணக்கில் அடங்காது. சிவ-பார்வதியின் அருளைப் பெறுவதற்காக திருவெம்பாவையையும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுவதற்கு திருப்பாவையையும் மார்கழியில் அதிகாலையில் பாராயணம் செய்பவர்களுக்கு இறை அருள் விரைவில் பெறுவர்.
கூடாரவல்லி சிறப்பு :
""கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'' இது ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவையின் 27 ஆவது பாசுரம். இதைப் பாடியதும் கோதையாகிய ஆண்டாளுக்கு கோவிந்தன் திருமண பாக்கியம் அருளியதாக் கூறப்படுகிறது. இருந்தாலும் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீ ஆண்டாள், முப்பது பாசுரங்களையும் பாடி முடித்தாள்.
கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களில் குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் " முழங்கை வழியே நெய் ஒழுகுமாறு' சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். இன்று பெருமாளைத் தரிசித்து பிரசாதம் பெற்றால் கன்னியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் நல்ல கணவன் கிட்டுவார் என்பது ஐதீகம். இந்த தகவலை தன்வந்திரி குடுமப்த்தினர் தெரிவித்தனர்.
Tamil version