Maha Homam 2018

மனித நேயத்தின் மான்பை தெரிந்து அதன் வழி செயல்பட, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 02.10.2018 செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதநல்லிணக்கம் வேண்டியும், மனித தர்மம் வளரவும், மனித நேயம் சிறக்கவும், தீமைகள் களையவும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மேற்கண்ட ஸ்ரீ தன்வந்திரி பெருமளை வேண்டி மனித நேய மஹா ஹோமம் நடைபெறுகிறது.

மனித நேயம் வளரவும். மனித நேயம் பொதுவானது. ஆனால், இறை சேவையில் உள்ளவர்களுக்கும் மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் சற்று வித்தியாசம் உள்ளது. மக்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு தேடியே, கடவுளையும், குரு மஹான்களையும் நாடி வருகின்றனர். கோவில், ஆசிரமம், சன்னிதானம், பீடம், மடம், போன்ற பல்வேறு ஆன்மீக இடங்களுக்கு வருபவர்களுக்கு அமைதியும், அன்பான உபசரிப்பும் தேவை. கடவுளுக்கு சேவை செய்யும் பாக்யம் கிடைத்த நாம், அவருடைய பக்தர்களையும், மதிக்க கற்று கொள்ள வேண்டும், தேடி வரும் பக்தர்களுக்கும், சேவார்த்திகளுக்கும், பார்வையாளர்களுக்கும் நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் நமது செயல்பாடுகள், எண்ணம், பேச்சு, பணிவு ஆகியவை இருக்க வேண்டும்.

நம்மிடம் வரும் பக்தர்களை அன்போடு வரவேற்று, அவர்களுக்கு உதவிட வேண்டும். புனித இடம் என்பது தூய்மையாகவும் இருக்க வேண்டும். நாமும் அப்படியே இருக்க கற்று கொள்ள வேண்டும். உரிய முறையில் வரும் பக்தர்களுக்கு பூஜைகள், யாகங்கள், பிரார்த்தனைகள், ஜெபங்கள், அலங்காரகள், ஆகியவை அவரவர்கள் சம்பிரதாயப்படி நடத்திக்கொடுக்க உரிய முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இதனை மனதில் கொண்டு தன்வந்திரி பீடத்தில் சேவை செய்யும் சேவார்த்திகள், தன்வந்திரி குடும்பத்தினர்கள், வருகை புரியும் பக்தர்கள், இதர நபர்கள், அர்ச்சகர்கள் அனைவரும் மனித நேயத்தை கடை பிடித்து கடமையாற்ற வேண்டும் என்ற வகையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மனித நேய மஹா ஹோமம் நடைபெறுகிறது.

தாய் எனும் அன்பும், சேய் என்னும் அருளும் இருந்தால் மட்டுமே ஜீவகாருண்யத்தைப் போற்ற முடியும். இன்றைய நாகரீக வளர்ச்சியில் முன்பிருந்த அளவு கூட இல்லாமல் மனிதநேயம் பின்தங்கி உள்ளது எனக் கூறலாம். இக்காலச் சூழலில் மனிதன் மற்ற உயிர்களையும் தன்னையும் நேசிக்கும் பண்பும், தனி மனிதனுடைய வளர்ச்சிக் குறைந்தும் உள்ளது. அறிவியலின் அசுர வளர்ச்சியும், அதன் வழியாக நிகழ்ந்து வரும் பண்பாட்டின் வீழ்ச்சியும். நாகரீகம் என்ற பெயரில் மனிதனைப் பழிவாங்கும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனநிலை பரவிக் கிடக்கிறது.

நேசம் தன்னிலை திரிந்து பாசம், பற்று என்ற நிலை கடந்து பற்று வெறியாகி வெறியுடன் சுற்றித் திரியும் இந்தக் கலாச்சார சீரழிவுதான் பண்பாட்டின் உச்சம் என்று கருதும் நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். அனைத்து உயிர்கள் மீதும் அன்பைச் செலுத்தும் நிலை, அது ஈகையாக, கருணையாக, பரிவாக, பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுத் திகழ்கின்றது.

அன்பையும், அருளையும் கொடுத்து நேசிக்கும் பண்புள்ளவனே மனிதன். மற்ற உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் மனப்பக்குவம்தான் இன்னும் மனிதனைத் தன் நிலையிலிருந்து தாளாமல் மனிதனாகவே அடையாளம் காணப்படுகிறது. மனிதர்களின் சுக துக்கங்களையும் உள்வாங்கி அதனைத் தனதாக்கிக் கொண்டு உணர்தல் வேண்டும். இதுவே தன்மையும் மற்ற உயிர்களையும் பேணிப் பாதுகாக்கும் பண்பாக கொள்ளப்படுகின்றது. இயற்கையோடு வாழ்ந்து, நேசித்த மனிதன் தன்னையும், தன்னைப் போன்ற பிற உயிர்களையும் நேசித்ததாலேயே மனிதநேயப் பண்பு வலுப்பெறும் எனலாம். மேற்கண்ட நலனுக்காக நடைபெறும் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு மனித நேயம் காப்போம்.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images