Maha Kali Yagam with Kubera Yagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் இன்று 07.11.2018 புதன்கிழமை அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. மேலும் பீடத்தில் வருகை புரிந்த பக்தர்களுக்கு தன்வந்திரி லேகியத்துடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. சென்ற 04.11.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தாந்தெராஸ், தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்று வருகின்ற ஸ்ரீ குபேர சாம்ராஜ்ய மஹாலக்ஷ்மி யாகத்தின் மஹா பூர்ணாஹுதியுடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு 05.11.2018 முதல் நடைபெற்று வந்த இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நிறைவு பெற்றது . இதில் ஏராளமானவர் பயன்பெற்றனர். மேலும் அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளுக்கு பாத பூஜையும் புஷ்பாஞலியும் நடைபெற்றது. இவ்வைபவங்களில் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் துணை நீதிபதி திரு. N.சிரிஷ் அவர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் மேட்டூர் பிரதேர்ச் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images