தை மாத முதல் வெள்ளிக்கிழமை 18.01.2019 அன்று காலை 10.00 மணி முதல் மஹிஷாசுர மர்த்தினியையும், ப்ரத்யங்கிரா தேவியையும் வழிபடும் விதமாக 1000 மஞ்சள் கிழங்கு கொண்டு மாபெரும் துர்கா யாகம் நடைபெற உள்ளது. மேற்கண்ட யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தெய்வங்களை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் வளம் பல சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் “யக்ஞஸ்ரீ” முரளிதர ஸ்வாமிகள்.
தை வெள்ளியின் சிறப்பும், யாகத்தின் பலனும் :
மகாசக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெற வேண்டியும், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் கிடைத்து குலம் தழைக்க வேண்டியும் சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும் விதத்திலும், குடும்பத்தில் மங்கல காரியங்கள் விரைவில் நடைபெறவும் அன்னை பராசக்தியை வேண்டி நடைபெறும் மேற்கண்ட யாகத்தில் பக்தர்கள் பங்கு பெற்று ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியுடன் பிரசாதம் பெற்று ஆனந்தம், ஐஸ்வர்யம், ஆரோக்யத்துடன், தீர்க்க சுமங்கலி பாக்யம் பெற அன்புடன் அழைக்கின்றோம். வேலூர் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். இப்பீடம் ஷண்மத ஸ்தாபனமாக அமைந்து இறை சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான தலமாக விளங்கி வருகிறது. இங்கே உள்ள நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானும், காளி சொரூபமான யக்ஞ சொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவியும், சாந்த ரூபத்துடன், சௌம்மிய ரூபமாக அமைந்து மரண பயத்தையும், மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி மங்களங்கள் அருளும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரும், கார்த்திகை பெண்களுடன் கார்த்திகை குமரனும், கல்யாண வரம் தரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, அன்னம் அளிக்கும் ஸ்ரீ அன்னபூரணி, வளம் தரும் வாஸ்து பகவான் போன்ற தெய்வ சந்நிதியும் விசேஷமானது.
முப்பெரும் தேவியராக குடிகொண்டிருக்கும் ஒப்பற்ற ஸ்தலம் தான் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்று பக்தர்கள் போற்றி வருகின்றனர்.
அடுத்து ஒரே கல்லில் உள்ள இராகு கேதுவிற்கு. ராகுகாலத்தில் துர்கை வழிபாடு விமரிசையாக நடந்தேறும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மஹிஷாசுர மர்த்தினிக்கு ராகுகால வழிபாடு, திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை, மாங்கல்ய பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் அவ்வப்பொழுது நடைபெற்று வருகிறது. இப்பூஜையில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்னாடகா மாநிலங்களிலிருந்தும், வேலூர், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் பலரும் இங்கு வந்து, ப்ரத்யங்கிரா தேவியையும், நவகன்னியையும், மஹிஷாசுர மர்த்தினியையும் பிரார்த்தனை செய்து, மிளகாய் வற்றல், நவதான்னியங்கள், வேப்ப எண்ணெய், மஞ்சள் போன்ற பொருட்களை யாக குண்டத்தில் சேர்த்து, அம்பாளை வணங்கி மாங்கல்ய சரடு, திருஷ்டி கயிறு போன்ற பொருட்களை பெற்று செல்லுகின்றனர்.
அதேபோல், இங்கே உள்ளது. அமாவாசை, அஷ்டமி ஆகிய தினங்களிலும் செவ்வாய், வெள்ளி முதலான நாட்களிலும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கும், அஷ்ட பைரவருக்கும், காலபைரவருக்கும், சொர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு பூஜைகளும் பரிகார வழிபாடுகளும் நடைபெறுகின்றன .
இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version