Mahaveer Jayanthi Festival

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 29.03.2018 வியாழக் கிழமை காலை 10.00மணியளவில் பகவான் மகாவீர்ர் ஜெயந்தியை முன்னிட்டு பகவான் மகாவீர்ர் மூலமந்திர ஹோமமும்  சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற உள்ளது.

     சமண மதத்தின் 24-வது தீர்த்தரங்கரர் பகவான் மஹாவீரரின் பிறந்தநாளை, சமணர்கள் புனிதநாளாகக் கொண்டாடுகிறார்கள். துறவு நிலைக்கு வந்த பிறகு 30 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்று தன் தத்துவங்களைப் போதித்தார். எட்டு கொள்கைகளை உள்ளடக்கியது பகவான் மஹாவீரர் போதித்த தத்துவம். அவற்றுள் ஐந்து ஆன்ம கொள்கைகள் மிக முக்கியமானவை. பிற உயிர்களைத் துன்புறுத்தாத அகிம்சை அவற்றுள் முதன்மை யானது. சமூகத்தில் அனைவருடனும் நட்பு பாராட்ட உதவும் சத்தியமும், உண்மையும் இரண்டாவது கொள்கை. எக்காலத்திலும் பிறரது உடைமைகளுக்கு ஆசைப்படாத குணம் மூன்றாவது கொள்கை. புலனடக்கத்தை வலியுறுத்தும் பிரம்மச்சரியம் நான்காவது கொள்கை. ஐந்தாவதாக இருப்பது உலக பந்தங்களில் இருந்து பற்றற்று இருக்கும் நிலை.
       உடல், மனம், ஆன்மா மூன்றையும் ஒருமுகப்படுத்தி கட்டுப்படுத்தும் முறையைப் போதித்தார். தேவைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சமூகத்தில் எல்லாருக்கும் எல்லாம் என்றிருப்பதான நிலை கிடைக்கும் என்பதையும் பகவான் மஹாவீரர் வலியுறுத்தினார். அவர் போதித்த ஐந்து கொள் கைகளும் சமூகக் குற்றங்களை அழித்து, அமைதியை நிலை பெறச் செய்வதாகவே இருந்தன. உலகெங்கும் பேரமைதி செழித்தோங்க விரும்பிய பகவான் மஹாவீரர், தமது 72-வது வயதில் உலக வாழ்க்கையைத் துறந்து முக்தி அடைந்தார். இப்படிபட்ட பகவான் மஹாவிரருக்கு தன்வந்திரி பீடத்தில் தனி சன்னதி அமைத்து அவருடைய ஒவ்வொரு ஜெயந்தியிலும் விசேஷ அபிஷேகமும் பூஜைகளும் செய்து வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images