இப்பாரத பூமியில் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்ற வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் இன்று 17.04.2019 புதன்கிழமை பகவான் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமத்துடன் பீடத்தில் பகவான் ஸ்ரீ மஹாவிர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
வாழ்வை உணர்த்திய மகாவீரர் :
அகிம்சை அறத்தைத் தாரக மந்திரமாக ஏற்று,சமண நெறிகளை உலகு வாழ்வாங்கு வாழ உபதேசித்த வர்த்தமான மகாவீரர். மகாவீரர் ஜயந்தித் திருநாளில் (29.3.18 வியாழன்) அவரை வணங்குவோம். இந்த உலகம் உய்யட்டும். உலகெல்லாம் அன்புமழை பொழியட்டும்!
சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவரும் நல்ல ஆரோக்யம், ஐஸ்வர்யம், குடும்ப ஒற்றுமை, தொழில் அபிவிருத்தி போன்றவை பெற்று செழிப்புடன் வாழ தன்வந்திரி பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
“ அகிம்சையே தர்மமாகும் , எந்த ஜீவனையும் கொல்லாதே , எவரையும் சார்ந்திராதே , எவரையும் அடிமைப்படுத்தாதே ” என்பதே பகவான் மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவக் கொள்கையாகும். மனித வாழ்வு மேன்மையுற, பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை மக்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும்.
இந்த இனிய நாளில், பகவான் மகாவீரரின் உயரிய போதனைகளை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி அன்பும், அறமும் நிறைந்த மகிழ்வான வாழ்வை வாழ்ந்திட வேண்டுமென்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.