வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மண்வளம் மழைவளம் வேண்டியும் பொன்\ வளம் பொருள் வளம் வேண்டியும் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தட்சிண கர்நாடகா கோகர்ணா ஷேத்திரத்தை சேர்ந்த பண்டிட் திரு. சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ஆச்சாரியர்கள் பங்கேற்று உலக நலன் கருதி பல்வேறு வகையான நாளும் நன்மைதரும் ஹோமங்கள் நடைபெற உள்ளன.
ஸ்ரீ வாஞ்சாகல்ப கணபதி ஹோமம்:
அனைத்து மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் காரியத் தடைகள் நீங்கவும் கர்ம வினைகள் அகலவும் அனைத்து செயல்களில் வெற்றி பெறவும் ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி ஹோமம், நவகிரஹ தோஷங்கள், கிரக தோஷங்கள் நீங்கவும் தொழில் வியாபாரம், குழந்தைபேறு போன்ற அனைத்து விதமான செயல்கள் நன்மைபெறவும் நவகிரஹ ஹோமம் நடைபெறுகிறது.
அஷ்டதிக் பாலகர் பூஜையும் வாஸ்து தோஷ சாந்தியும் :-
நாம் வாழும் ஊர்களில் வசிக்கும் இல்லங்களில் ஏற்படுகின்ற தொல்லைகள் அகலவும் பஞ்சபூதங்களால் பலவிதமான நன்மைகள் பெறவும். பஞ்சபூத தெய்வங்களின் பெருமைகளை தெரிந்து கொண்டு அவர்களை வழிபட்டு பலன்கள் பெறவேண்டியும் வாஸ்து பகவானுடைய அருள்பெற்று வாஸ்து தோஷ தடைகள் ஏற்படாமல் இருக்க அஷ்டதிக் பாலகர் பூஜையும் வாஸ்து தோஷ நிவர்த்தி பூஜையும் ஹோமமும் நடைபெற உள்ளது.
தன ஆகர்ஷண, ஐன ஆகர்ஷண பூஜை மற்றும் ஹோமங்கள்:-
நாம் செய்யும் தொழிலிலும் வியாபாரம் மற்றும் இருக்கும் இடம், நிர்வாகத்தில் ஏற்படும் தோஷங்கள் நீங்கி மக்களின் மத்தியில் ஆகர்ஷணம் பெறவும் நிறைய மக்கள் வருகைபுரிந்து தொழில் வியாபாரம் செழிக்கவும் மனத்தடை நீங்கி பணத்தடை அகலவும் ஆகர்ஷண ஹோமங்கள் நடைபெற உள்ளது.
ருத்ர ஹோமம்:-
நீர்நிலை ஆதாரங்கள் பெருகவும் இயற்கை வளம் வேண்டியும் விவசாயிகள் வளரவும் விவசாய குடும்பத்தினர் ஆரோக்யத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழவும் மழைவேண்டியும் அனைத்து மக்களும் நோயின்றி ஐஸ்வர்யத்துடனும் அவர்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணவும் ருத்ரஹோமம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட ஹோமங்கள் 04.03.2017 மாலை 4.00 மணிக்கு மேல் யாகசாலை பூஜை மற்றும் கலசபூஜையுடன் ஆராதனையும் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து 05.03.2017 மேற்கண்ட யாகங்கள் 2.00 மணிவரை நடைபெறும். இறுதியாக மஹாபூர்ணாஹீதி நடைபெற உள்ளது
உலக மக்களின் நலன் கருதி நடைபெறும் இந்த யாகத்தில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு தன்வந்திரி பகவானின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version