வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வா மிகள் அருளானைப்படி மாந்தி கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகல வருகிற 17.08.2019 சனிக்கிழமை காலை10.30 மணி முதல் 12.00 மணி வரை மாந்தி தோஷ பரிகாரமும், மஹா ம்ருத்யுஞ்சய ஹோமமும் நடைபெறுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் மாந்தி கிரகம் சனி கிரகத்தின் உபகிரகமாக உள்ளது. இவர் சனீஸ்வரனின் மகனாவார். மாந்தி கிரகம் ஒரு கொடிய பாவ கிரகமாகும். மாந்தி ஒரு நபரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த ஸ்தானம் பாதக ஸ்தானமாகிறது. அந்த ஸ்தானாதிபதியும் பாதகாதிபதியாகிறார். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகிறது. - ஜாதகத்தில் மாந்தி தான் இருக்கும் வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களை பார்க்கும். மாந்தியின் பார்வைப்படும் வீடுகளும் தோஷத்தை பெறுகிறது.
மாந்தி லக்னத்திற்கு 4 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு பூமி தோஷம் ஏற்படும், வீட்டில் தெய்வ சக்தி போய் விடும், வாழும் இடம் களையிழந்து போய்விடும், வீட்டில் இருப்பவர்கள் நல்வாழ்க்கை அமையாது, பில்லி, சூன்யம், செய்வினை, வீண் வம்பு வழக்குகள், மருத்துவ செலவுகள் ஏற்படும், குடும்பம், தொழில், வாழ்கைஅந்தஸ்து முதலியவற்றில் பெரிய பாதிப்புகள் ஏற்படும்.
ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில் மாந்தி இருந்தால் பிரேத சாபம் ஏற்படும். 6 ல் மாந்தி இருந்தால் தீராத கடன் உண்டாகும்.7 ல் மாந்தி கணவன் – மனைவி உறவு பாதிப்படையும். 9 ல் மாந்தி இருந்தால் அவருக்கு கடந்த ஜென்ம பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் தோஷங்களை குறிக்கும். இது போன்று இது போன்று எண்ணற்ற கெடுபலன்கள் மாந்தியால் ஏற்படும் என்பது ஜோதிட விதியாகும்.
மாந்தி தோஷத்தால் ஏற்படும் இத்தகைய செயல்கள் நீங்கி வாழ்வில் நன்மைகள் ஏற்பட ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற17.08.2019 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ள மாந்தி பரிகார ஹோமத்தில் கலந்து கொண்டு மாந்தி தோஷம் நீங்க பிரார்த்தனை சங்கல்பம் செய்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி எனும் காளி தேவிக்கும், பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று எள்ளெண்ணேய், மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம், நெய், எள், வெல்லம், கருப்பு நீல நிற வஸ்திரங்கள் கொடுத்து பிரார்த்தனை செய்து, வணங்க வேண்டும். இப்பூஜையின் மூலம் மாந்தியல் ஏற்படும் கெடு பலன்கள் நீங்கும். மாந்தி தோஷ பரிகார பூஜையில் பங்கேற்ப்பவர்கள் கலசாபிஷேகம் செய்து கொண்டு மாந்தி தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.