Mangala Chandi Yagam Thuvangiyathu

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 22.02.2020 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மங்கள சண்டி யாகம் முதல் நாள் ஹோமம் நடைபெற்றது.

இதில் மங்கள இசை, கோபூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், 64 யோகிணி பைரவர் பலி பூஜை, யாகசாலை பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பஞ்ச திரவியாபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மேலும் நாளை 2 ஆம் நாள் சண்டி ஹோமமும் அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 
 

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images