Mangala Gauri Homam - pomegranate Abhishekam

மாதவிடாய் பிரச்சினை உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி, இப்பிரச்சனை பூர்வ புண்ணியத்தினாலும், மரபணுக் கூறுகளின் மாற்றங்களாலும், சுகாதாரயின்மை, உணவு பழக்க வழக்கம், சுற்றுபுறசூழல், ஜாதகத்தில் கிரக ரீதியாக உள்ள தோஷங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் ஒரு பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. சில பெண்கள் ருதுவாவதுமில்லை. கருப்பை கட்டிகள் ஒரு சிலருக்கு புற்றுநோய்க் கட்டிகளாக மாறுகின்றன. இவை மட்டுமின்றி மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். மாதவிடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப்போக்கு ஏற்படுவது. இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம். சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல். மலச் சிக்கல். தாங்க முடியாத வயிற்று வலி, தூக்கம்மின்மை,  போன்ற பல நோய்கள் மட்டுமின்றி மறைமுக நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் குழந்தை பாக்யம், தாம்பத்திய ஒற்றுமை, முக வசீகரயின்மை, திருமணத் தடைகள், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேற்கண்ட நோய்களும் தோஷங்களும் அகல வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 27.02.2018 செவ்வாய் கிழமை பூசம் நட்சத்திரத்தில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பெண்களின் தாயாகவும் வைத்திய ஈஸ்வரியாகவும் விளங்குகின்ற  ஸ்ரீ மரகதாம்பிகைக்கு மங்களகௌரி ஹோமத்துடன் மாதுளம் பழம் சாறு கொண்டு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து ஸ்வாமிகள் திருக்கரங்களால் பக்தர்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால் ஏற்படும் மனநோய் உடல் நோய் நீங்கவும்,  ஹோம பிரசாததுடன் கஷாயம் பிரசாதம் வழங்கி ஆசிர்வதிக்க உள்ளார். பிரசாதத்தை பெற்று இங்குள்ள வைத்யராஜனாக உள்ள ஸ்ரீ தன்வந்திரியையும், வைத்ய லக்ஷ்மியாக உள்ள ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மியையும், வைத்தீஸ்வரனாக விளங்குகின்ற ஸ்ரீ மரகதேஸ்வரரையும், ஞானகுருவான ஸ்ரீ கார்த்திகை குமரனையும், குரு மஹான்களையும், 468 சித்தர்களையும் தரிசித்து அருள் பெற பிரார்த்திகின்றோம்.

மேற்கண்ட பூஜையிலும் ஹோமத்திலும் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் சிகப்பு நிற மலர்கள், சிகப்பு நிற பழங்கள், சிகப்பு நிற வஸ்திரங்கள், மஞ்சள் குங்குமத்துடன் சௌபாக்ய பொருட்கள் அளித்து அம்பிகையின் அருள்பெற்று நீண்ட ஆயுளுடனும் நிலையான செல்வத்துடனும் நிம்மதியான வாழ்வு பெற அன்புடன் அழைக்கின்றோம்.
Tamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images