Mohini EKadasi Munnittu Maha Danvantri Homam and Sudarsana Homam

மாதவிடாய் கோளாறு, நாட்பட்டநோய்கள், ரத்தசோகை தீர்க்கும் மோகினி ஏகாதசி.
வருகிற 22 05.2021 சனிக்கிழமை மோகினி ஏகாதசி முன்னிட்டு மகா தன்வந்த்ரி ஹோமம், சுதர்சன ஹோமம் நெல்லிக்காய் பொடி திட்டுமஞ்சனம் காலா 10 மணிக்கு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெறுகிறது.
வைகாசி வளர்பிறை ஏகாதசியில் திருமாலை பிராத்தனை செய்வது மிகவும் சிறப்பு
வைகாசி மாதத்தில் விரதம் இருந்து வணங்குவதற்குரிய ஒரு சிறப்பு நாளாக வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி தினம் வருகிறது. இந்த தினத்தில் நாம் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பெறலாம். வைகாசி மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி ” மோகினி ஏகாதசி” எனப்படுகிறது.
திரிஷ்டிமான் என்கிற மன்னன் அரச குலத்தில் பிறந்து அரச போகங்களை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருந்தான். அப்படிப்பட்ட மன்னன் திரிஷ்டிமான் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, வைகாசி வளர்பிறை ஏகாதசி விரதமிருந்து வாழ்வின் மாயையாகிய சுக அனுபவித்திலிருந்து மீண்டு பெருமாளின் பூரண அருளை பெற்றான். இந்நாளில் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது.
 
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும்.
இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு அக்குறைபாடு நீங்கும். பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை பெறும்.
சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே வைகாசி மாதம் எனப்படுகிறது. வைகாசி மாதம் என்பது பொதுவாக முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய மாதம் என்று பலர் நினைத்தாலும் திருமாலின் வழிபாட்டிற்குரிய மாதமாகவும் இது இருக்கிறது. வாழ்வில் நீங்கள் விரும்பியவற்றை பெற வைகாசி ஏகாதசி விரதம் இருப்பது நல்லது.மேற்கண்ட பலன்களை பெற தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறும் ஹோமங்களில் சங்கல்பம் செய்து கொள்ளலாம்.
Ct.94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images