வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி வருகிற 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை ஷோடச (16) திருக்கல்யாணத்திற்கான பந்தக்கால் முஹூர்த்தமும், மார்ச் மாதம் 13 முதல் 17 வரை நடைபெறும் முப்பெரும் விழா குலதெய்வ அருள், கிராம தேவதை அனுக்கிரகம் வேண்டி நாளை 19.02.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், நவகன்னிகளுக்கும் பொங்கலிட்டு படையலிடும் வைபவமும், கிராம தேவதா பூஜையும் நடைபெற உள்ளது.
ஸ்ரீ முனீஸ்வரரின் சிறப்பு:
ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் ஸ்ரீ முனீஸ்வர்ரை இந்துக்கள் முக்கிய தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட்டு வருகிறார். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்முடைய நம்பிக்கையாகும். முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய முனீஸ்வரன் உக்ர தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார்.
வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரருக்கு வருகிற19.02.2019 செவ்வாய்கிழமை பௌர்ணமி அன்று நண்பகல் 12.00 மணியளவில் மஹா அபிஷேகத்துடன் பொங்கல் வைத்து படையலிட்டு வருகிற மார்ச் மாதம் 13 முதல் 17 வரை நடைபெற உள்ள 15 ஆம் ஆண்டு விழாவும், 16திருக்கல்யாணமும், ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தி விழாவும், 1000 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியும், இதர வைபவங்களும் தடையின்றி நடைபெறவும் 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற உள்ள பந்தக்கால் முஹூர்த்தம் சிறப்பாக நடைபெற முனீஸ்வரருக்கு பொங்கல் வழிபாடு நடைபெற உள்ளது.
நவகன்னி வழிபாடு:
பெண்கள் நலமுடன் வாழவும், அவர்களுக்கு மாங்கல்ய பலம் கூடவும், சுப காரியங்கள் தடையில்லாமல் நடைபெறவும் நவசக்திகளின் அனுக்கிரகம் பெற்ற நவகன்னிகளுக்கு பொங்கலிடும் வழிபாடு நடைபெற உள்ளது.மேற்கண்ட வைபவங்களுக்கு பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு முனீஸ்வரர், நவகன்னிகைகள் மற்றும் கிராம தேவதா அருள் பெற்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யம் பெற்றும் ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version