வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 05.11.2018 திங்கள்கிழமை, திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை கோ பூஜை, யாகசாலை பூஜை, மஹா சங்கல்பம், ஜபம், மற்றும் தன்வந்திரி மஹா ஹோமமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 108 மூலிகை தீர்த்த பொடிகளால் மஹா அபிஷேகமும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மங்கள இசையுடனும் வேத பாராயணத்துடனும், தன்வந்திரி மூல மந்திர ஜபம் செய்து தன்வந்திரி பெருமாள் சன்னதி முன்பாக உரலில் மருந்து இடித்து தன்வந்திரி லேகியம் தயாரிக்கப்பட்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ அலங்காரத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு சிறப்பு ஸஹச்ர நாம அர்ச்சனையும் நடைபெற்றது.
மேலும் 04.11.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தாந்தெராஸ், தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்று வருகின்ற ஸ்ரீ குபேர சாம்ராஜ்ய மஹாலக்ஷ்மி யாகத்தின் இரண்டாவது கால யாகம் நடைபெற்றது. நாளை 06.11.2018 மூன்றாவது கால யாகமும், 07.11.2018 அமாவசை அன்று மஹா பூர்ணாஹுதியுடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version