இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி வருகின்ற 16.03.2020 திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியன்று காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நவாவரண பூஜை, தச மஹாவித்யா ஹோமத்துடன் சொர்ணாகர்ஷண பைரவர் சகித அஷ்ட பைரவர் யாகம் நடைபெற உள்ளது.
நவாவரண பூஜை:
மாமேருவிற்கு செய்யப்படும் பூஜையே நவாவரண பூஜையாகும். நவ என்றால் ஒன்பது.மாமேருவிற்கு ஒன்பது ஆவரணங்கள் உள்ளன. இந்த ஒன்பது ஆவரணங்களில் குடியிருக்கும் தெய்வங்களை போற்றி வழிபடும் விதத்தில் இந்த நவாவரண பூஜை நடைபெறுகிறது, இதில் பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் நடைபெற்று ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய பூஜை முடிந்ததும் ஒரு தீபாராதனை நடைபெறும். இந்த ஒன்பது தீபாராதனைகளுக்குப் பிறகு சுவாஸினி பூஜை, கன்யா பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். இந்த நவாவரண பூஜையில் கலந்துகொள்வதன் மூலம் குழந்தை பாக்கியம் பெறலாம், சகல தோஷ நிவர்த்தி கிடைக்கும், கல்வி மேன்மை பெறலாம், இனிய இல்லறம், அஷ்ட ஐஸ்வர்ய பிராப்தி, உத்தியோக, வியாபார நன்மைகள், நோய்கள் அகலும், போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம்.
தச மஹாவித்யா ஹோமம்
இவ்வுலகில் குடிகொண்டிருக்கும், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் அன்னை சக்தியின் பத்து வடிவங்கள் தச மஹாவித்யா தேவியர்கள் ஆவார். இவர்கள் காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேசுவரி, திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா என்று அழைக்கப்படுகிறது. தச மஹா வித்யா தேவியர்கள் ஞானத்தின் வடிவமாகவே திகழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருசேர போற்றும் விதமாக நடத்தப்படும் ஹோமமே தச மஹா வித்யா ஹோமம் ஆகும். இதில் பங்கேற்றால் அறியாமை, மாயை ஆகியவற்றை நீங்கும், மன அழுக்குகளை நீக்கும், பாதுகாப்பு அளிக்கும், அகம்பாவத்தை வென்று, ஆன்மீக ஞானம் பெறலாம், ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நமது திறனை முழுமையாகப் பயன்படுத்த உதவும், முயற்சிகளில் வெற்றி பெறலாம், கலைத் துறையில் முன்னேற வழிவகை செய்யும், எதிரிகள் தொல்லை அகலும், செல்வத்தை பெறலாம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம்.
சொர்ண ஆகர்ஷண பைரவர் சகித அஷ்ட பைரவர் யாகம் :
சொர்ணாகர்ஷண பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் அனைத்து செல்வத்திற்கும் அதிபதியாவார். இவர் இடது கையில் கபாலத்திற்கு பதிலாக அக்ஷய பாத்திரத்துடன் காட்சி அளிப்பார். அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடுவதாக புராணங்கள் கூறுகின்றன.
மேலும் எண் திசைகளை காப்பாற்றும் பைரவர்களை அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் ஆவார்.
பைரவரை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்றால் வர வேண்டிய பணம் வந்து சேரும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்து விட வழி கிடைக்கும், வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும், சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும், வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும், தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரிக்கும், அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும், பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீரும், கர்மவினைகள் தீரும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறலாம், வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலும் போன்ற ஏராளமான நன்மைகள் பெறலாம்.
இத்தகைய சிறப்புகள் வாயந்த ஹோம பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று, ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.